LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடக்கம்

2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும். மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

 

அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வாயிலாக ஆணை வெளியிடப்பட்டது.

 

மாலை 4 மணி முதல் 6மணி வரை

 

அதன்படி சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

 

 10-ம் வகுப்பு தேர்ச்சி

 

இக்கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை 25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களிலும் 1.12.2023 முதல் தொடங்கிடவும். பயிற்சியானது 1.1.2024 முதல் தொடங்கிடவும் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 

நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

by Kumar   on 30 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.