|
|||||
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? |
|||||
![]() தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? இயற்கை விவசாயி ரவிபாரதி என்பவர் “இன்றைய நிலைமை” என்ற தலைப்பில் கீழ்காணும் அவருடைய அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார்.
ஒரு கட்டில் ஐம்பது காய் என்றால் , இருபது கட்டு என்றால் மொத்தம் 1000 காய். சந்தை விலை : ஒரு காய் - Rs.3/- மொத்த சந்தைவிலை: Rs.3000/- விற்பனை கூலி, போக்குவரத்து , இடையில் கமிஷன் - Rs. 1/- என்று வைத்துக்கொண்டால், முதலீடு செய்துள்ள வியாபாரிக்கு வருமானம் Rs.1/- என்று வைத்துக்கொண்டால், விவசாயிக்கு Rs.1/- கிடைக்கவேண்டும். அதாவது மூன்றில் ஒரு பங்கு வியாபாரிக்கு, ஒரு பங்கு செலவு-கமிஷன், மீதி ஒரு பங்கு உற்பத்தி விலையாக விவசாயிக்கு கிடைத்திருக்கவேண்டும். அதாவது 1000 ரூபாய். ஆனால் கிடைப்பதோ நானூறு. மேலே சொன்ன கணக்குப்படி இவருக்கு நானூறுக்கு பதில் ஆயிரம் கிடைத்திருந்தால் இவருக்கு செலவு போக 600 ரூயாய் கையில் வருமானமாக கிடைத்திருக்கும். இதற்கு கீழ்காணும் பின்னூட்டங்கள் வந்தன
இது உண்மையான நிலவரமா என்றால் ஆம். இதுதான் தமிழ்நாட்டின் சிறு, குறு, விவசாயிகளின் இன்றைய நிலைமை. சந்தையில் விற்பதற்கு அவர்கள் இயற்கையுடனும், விவசாயத்தின் பல்வேறு சிக்கல்களுடனும் போராடி வெல்வதை விடக் கடினமாக உள்ளது.. அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரமம், செலவிடும் நேரம் , வரும் வருமானம், என்று எதுவும் நியாயமாக இல்லை. விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாத நிலையை இன்றைய தமிழ்நாட்டின் இடைத்தரகு பேராசை சந்தை வியாபாரம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்ற முடியுமா என்றால், முடியும் என்பதே பதிலாக இருக்கும். காரணம், எல்லா பிரச்சினைகளுக்குமே தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் பிரச்சினைகள் இல்லை. என்னதான் தீர்வு: இதற்குத் தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்யவேண்டும். எந்த பகுதியில் என்ன விளைகிறது.. அடுத்த ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், இரு மாதத்தில், மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில் என்ன அறுவடைக்கு வருகிறது என்பதைத் தெரிவிக்க ஒரு வசதி வேண்டும். அவர்களுடைய பொருள் சந்தையில் எவ்வளவு விற்கப்படுகிறது என்று அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். அதில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு விலை கிடைக்கப்படவேண்டும். விற்கப் போகும் முன்பே இன்றைய ஒரு முருங்கைக்காய் விலை என்ன வரும் என்பதை விவசாயிக்கு (உற்பத்தியாளர்) தெரிவிக்கும் முறை வரவேண்டும். நான்கு முருங்கைக்காய் உற்பத்தியாளரும், நாற்பதுக் காய் உற்பத்தியாளரும், நானூறு காய், நாலாயிரம் காய் உற்பத்தியாளரும் என்ன விலை என்பதை அறிந்துகொண்டு சந்தையில் வந்து வைத்துவிட்டு உரிய விலை பெறுவதும், அல்லது அவர்கள் வங்கிக்கணக்கில் அதற்கான பணம் போய்ச் சேருவதும் உறுதிப்படுத்தும் ஒரு வலிமையான சந்தையை உருவாக்கவேண்டியது அவசியம். என்ன விலைக்கு மக்களுக்குச் சந்தையில் விற்கப்படுகிறதோ அதையொட்டிய ஒரு சதவீதம் உற்பத்தி விலையாக விவசாயிக்குப் போவதற்கு வெளிப்படையான சந்தையை ஏற்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதே நாம் சிந்திக்கவேண்டிய ஒன்று.
இது தொழில்நுட்பம் மூலம் மட்டுமே சாத்தியம். சிறு வணிகம் முதல் , பெரிய வணிகம் வரை அனைத்து விவசாயப் பொருள்களும் முறைப்படுத்தப்பட்ட வழியில் விற்கவும் , இடைத்தரகு பேராசை சந்தை வியாபாரம் நீக்கப்பட்டு இன்றைய சூழல் மாற்றியமைக்கப்படவேண்டியது அவசியமாகிறது. இதைத் தீர்ப்பதற்கு உரியத் திட்ட வரைவை, தீர்வு சிந்தனைகளை, வரைபடங்களைக் கீழே பின்னூட்டத்தில் பகிரவும். விரைவில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி இதற்கு என்ன தீர்வு என்பது குறித்துக் கலந்துரையாடித் தீர்வுக்கான ஏற்பாடு செய்வோம்.
-ச.பார்த்தசாரதி |
|||||
![]() ![]() |
|||||
by Swathi on 21 Mar 2019 6 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|