LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

தமிழக உள் மாவட்டங்களுக்காக பெங்களூருவில் புதிய ரேடார்: நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை அறிவிப்புகளை வழங்கத் திட்டம்.

நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக மத்தியப் புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 80-வது ஆண்டு விழா சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) நடைபெற்றது.

 

 இதில் மத்தியப் புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் தென் மண்டலத் தலைவர்கள் என்.ஜெயந்தி, ஏ.கே.பட்நாகர், எஸ்.கே.சுப்பிரமணியன், ஆர்.வி.சர்மா, ஒய்.இ.ஏ.ராஜ், முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் ஆகியோரைக் கவுரவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் பங்கேற்றுப் பேசியபோது, தமிழகம் வெள்ளம், புயல், வறட்சி, மேக வெடிப்பால் ஏற்படும் குறுகிய காலத்தில் கொட்டித்தீர்க்கும் அதிகனமழை போன்றவற்றால் பாதிக்கக்கூடிய மாநிலமாக உள்ளது. அரசு சார்பில் 1400 மழை மானிகள், 150 தானியங்கி வானிலைமையங்களை அமைக்க இருக்கிறோம். அந்தத் தரவுகளைக் கொண்டு வானிலை எச்சரிக்கையின் துல்லியத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

 

பின்னர் மத்தியப் புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் 10 சதுர கி.அளவில் வானிலை எச்சரிக்கைகளை வழங்கும் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போது மாவட்ட அளவில் மழை தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கி வருகிறோம்.

 

அதைத் தாலுகா மற்றும் கிராம அளவில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதாவது 1 சதுர கி.மீ பரப்பளவில் துல்லியமாக வழங்க முடியும். உலகில் எந்த நாட்டிலும் அப்படி வழங்கவில்லை. வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்தக் கூடுதல் வானிலை கண்காணிப்பு கருவிகளை நிறுவ இருக்கிறோம்.

 

 

கணினி மாதிரியின் தரத்தையும் மேம்படுத்த இருக்கிறோம். வளி மண்டல மேலடுக்கின் நிலையை அறியத் தற்போது நாடு முழுவதும் 59 இடங்களில் தினமும் 2 முறை பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. இதற்குப் பதிலாக நாளொன்றுக்கு 10 முறை அளவிட, பலூன்களுக்கு பதிலாக இதர தொழில்நுட்பங்கள், கருவிகளைப் பயன்படுத்த இருக்கிறோம்.

 

 

தற்போது நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. முன்பு 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. இப்போது இதே வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி இருப்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மொஹபாத்ரா கூறும்போது, ஓராண்டுக்குள் பெங்களூருவில் நவீன ரேடார் அமைக்கப்பட உள்ளது. இது தமிழக உள் மாவட்டங்களின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். எங்கள் தரவுகளைக் கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்றவை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன என்றார்.

 

 

 

தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, தமிழக அரசு சார்பில் 3 இடங்களில் ரேடார் அமைக்க, வானிலை ஆய்வு மையம் மூலமாகத் தொழில்நுட்ப உதவிகள் வழங்கி, இடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்றார்.

 

 

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், என்ஐஓடி இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

by Kumar   on 28 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மானாவாரியில் மகத்தான மகசூல். மானாவாரியில் மகத்தான மகசூல்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.