LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!

இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தடைபட்டு முகம் அழகு பெறும்.


குண்டாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


நகங்களை வெட்டும் முன், நகங்களில் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.


கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். 


தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.


வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்கறுத்துப் போகாமல் இருக்கும்.


தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.


பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.


ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

 

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.


ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.


தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

by Swathi   on 25 Sep 2014  20 Comments
Tags: Iyarkai Azhagu Kurippugal   Beauty Tips   Natural Beauty Tips   Alagu Kurippugal   முக அழகு குறிப்புகள்   சரும அழகு குறிப்புகள்   இயற்கை அழகு குறிப்புகள்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !! அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!
மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !! மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !!
அழகான முகத்திற்கு குங்குமபூவில் இருக்கு ரகசியம் ! அழகான முகத்திற்கு குங்குமபூவில் இருக்கு ரகசியம் !
கருத்துகள்
13-Nov-2019 10:42:29 மீனா said : Report Abuse
உடல் முழுவதும் நேரந்தரமாக வெள்ளை நிறமாக டிப்ஸ் தேவை
 
10-Feb-2018 12:02:49 Divya said : Report Abuse
super
 
13-Nov-2017 11:05:46 harisankari said : Report Abuse
weight gain panna oru best tips solluga plz
 
13-May-2017 05:48:25 A .VIRGINIYAMARY said : Report Abuse
உடல் பருமன் குறைய டிப்ஸ்,மற்றும் முகம் அழகு டிப்ஸ் பற்றிய டிப்ஸ்
 
15-May-2016 05:40:24 ramya said : Report Abuse
Kalar aga enna seiyanum
 
23-Apr-2016 23:47:53 geetha said : Report Abuse
Mugam palapalapaga viyarguru மறைய என்ன செய்யவேண்டும்
 
19-Apr-2016 05:26:57 பிரியா said : Report Abuse
முகம் அழக பெற என்ன செய்ய வேண்டம் மற்றும் முடி வளர என்ன செய்ய வேண்டும்
 
04-Feb-2016 01:51:31 veni said : Report Abuse
Karuvalayam nenge enne seiya vendum
 
20-Jan-2016 22:35:24 kavitha said : Report Abuse
கண்ணில் கருவளையும் போக்க அண்ட் கணத்தில் கரும் திடுகள் போக்க
 
19-Jan-2016 01:10:15 mahe said : Thank you
முகத்தில் கருப்பு கருப்பாக சில திட்டுகள் உள்ளன அதை எப்படி போக்குவது
 
18-Jan-2016 02:53:32 kokila said : Report Abuse
தலை முடி வளர மற்றும் முகத்தில் கருவளையம் &டோடல் கருப்பை நீக்க
 
18-Jan-2016 02:53:31 kokila said : Report Abuse
தலை முடி வளர மற்றும் முகத்தில் கருவளையம் &டோடல் கருப்பை நீக்க
 
06-Jan-2016 09:34:27 Jaya said : Report Abuse
கலர் வர என்ன
 
16-Sep-2015 05:25:33 abirami said : Report Abuse
karum pulli poga kuripu solunga Friends
 
18-Aug-2015 04:35:17 ponmani said : Report Abuse
கருவளையம் neenga
 
18-Jul-2015 02:57:16 s.geetha said : Report Abuse
En nose LA white heads neraiya iruku athu poga ena pananum
 
10-Apr-2015 05:53:14 சஸ்மிதா said : Report Abuse
முடி வளர என்ன செய்ய வேண்டும்
 
26-Feb-2015 04:46:44 saranya said : Report Abuse
Face black mark remove trement plz one week trement
 
01-Jan-2015 03:27:12 அணு said : Report Abuse
சிம்ப்லி சூப்பர் இருக்கு..
 
01-Oct-2014 02:58:33 prasanth said : Thank you
mugan vellayaga maranum palaplappairukkanum karumpulligal pogavenum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.