LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜோதிடம்

பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்த நாள் - ஜோதிடர் பலராமன்

பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்த நாள்.         ஜோதிடர் பலராமன் 

ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே தைப்பூசம் நாளாகும். இந்த வருடம் பிப்ரவரி ஏழாம் தேதி தை மாதம் இருபத்திநான்காம் நாள் செவ்வாய்க் கிழமை முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகர் கோயிலிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணம் என்ன?  இந்த உலகத்துக்கே அன்னையான பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்தது தைப்பூச நன்னாளில் தான்.


முன்னொரு காலத்தில் கிரௌஞ்சன் மற்றும் தரகாசூரன் என்ற இரண்டு அரக்கர்கள் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து அவர்களை இறைவனை வணங்க முடியாமல் தொல்லைகள் கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த முனிவர்கள் பார்வதி பரமேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர். அரக்கர்களை அழிக்க சிவபெருமானால் படைக்கப்பட்டவரே வல்லமை வாய்ந்த முருகர். மலை வடிவில் இருந்த கிரௌஞ்சனையும் யானைத்தலை கொண்ட தாரகசூரனையும் அழிப்பதற்காக சிவபெருமானும் பார்வதி தேவியும் அங்குசம், வில், அம்பு, தண்டாயுதம், வஜ்ஜிராயுதம், மழு ஆகிய பதினோரு வகையான ஆயுதங்களை முருகப்பெருமானிடம் அளித்தனர். பார்வதிதேவி இந்த ஆயுதங்களுடன் மிகச் சக்தி வாய்ந்த "வேல்" என்னும் ஆயுதத்தையும் முருகனை ஆசி செய்து வழங்கினார். அம்மையப்பர் தந்த ஆயுதங்களால் முருகப்பெருமான் அந்த இரண்டு அரக்கர்களையும் அழித்து இந்த உலகத்துக்கே நாதனான சிவபெருமானை வணங்கிய முனிவர்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகள் தொடர வழி செய்தார். 


இந்த வேலின் பெருமைகள் சொல்லில் அளவிட முடியாதவை.  முருகனின் வேல் ஞானம், சக்தி, தைரியம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தர வல்லது. இவை அனைத்தும் இருந்தால் நம்மிடம் செல்வம் தானே தேடி வரும். வேலை வணங்குவது முருகப்பெருமானை வணங்குவதற்குச் சமம். தைப்பூச நன்னாளில் முருகனையும் வேலையும் வணங்குவது, கந்த ஷஷ்டி கவசம் படிப்பது அல்லது கேட்பது, கோயிலில் முருகனுக்கு அர்ச்சனை செய்வது மற்றும் "ஓம் சரவண பவ" என்று 108 முறை ஜபிப்பது ஆகியவற்றால் எதிர்ப்புக்களை முறியடித்து எதிரிகளை வெல்லலாம், வாழ்வில் தன்னம்பிக்கை பெறலாம், மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம். தீயினால் ஏற்படும் ஆபத்துக்களும் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்களும்  விலகும். சகோதர  சகோதரிகளிடம்  இருக்கும் கருத்து வேற்றுமைகள் விலகும். உங்கள் திறமைகள் அதிகரிக்கும். வாழ்வில் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

 


முருகனையும் வேலாயுதத்தையும்  தினமும் வணங்குவோம். வாழ்வில் நன்மைகள் பல பெறுவோம். 

by Swathi   on 26 Jan 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த
உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா? உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
01-Feb-2012 09:49:01 loganathan said : Report Abuse
thankyou
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.