படிப்பு, தொழில், வெளிநாடு பயணம் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, புலம்பெயர்ந்து சென்று வாழவேண்டிய நிலை. பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப கிராமங்களிலிருந்து இடம்பெயர்வுகள் அதிகரித்துள்ள வாழ்வியல் மாற்றத்தில் குலதெய்வ வழிபாடு நடைமுறை குறைந்துவருகிறது. பரப்பான சூழல்களுக்கு இடையில் உறவுகளை ஒருங்கிணைத்து குலதெய்வ கோவில் குடும்பமாகச் சென்று மொட்டைபோட்டு , கிடா வெட்டி, காதுகுத்தி , உறவினர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய அனுபவம் பலருக்கு கிடைப்பதில்லை. இதை மீண்டும் நினைவூட்டவும், உங்கள் குலதெய்வக் கோவில்களை www.ValaiTamil.com/temples பகுதியில் ஆவணப்படுதவும், உங்கள் குலதெய்வம் குறித்த குறிப்புகள், பெரியவர்கள் பகிர்ந்த தகவல்கள் , காணொளி, புகைப்படங்கள் என்று அனைத்தையும் google Drive , YouTube ல் ஏற்றி எங்களுக்கு கட்டுரையை Kuladeivam.Valaitamil@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
இம்முயற்சிக்கு பரிசுத்தொகை வழங்கி கைகோர்க்க விரும்புபவர்கள் Kuladeivam.Valaitamil@gmail.com மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
|