போட்டிகளில் தொடர்ந்து மோசமான தோல்வியடைந்திருப்பதற்கான காரணத்தை அணியினரிடம் எழுதித் தரக்கேட்டார், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். அதில் 4 பேர் மட்டும் எழுதிக் கொடுக்கவில்லை. இதனால் நிர்வாகத்தை மதிக்கவில்லை எனக்கூறி நால்வரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த நால்வரில் சிறப்பாக பந்து வீசி வரும் ஒரே வீரரான ஜேம்ஸ் பேட்டீஸ்சனும் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான வாட்சனும் இருந்து தொலைத்திருப்பதுதான் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள பெருஞ்சிக்கல். ஆனாலும் யார் கண்டது? இந்த அணியே வெற்றி பெறவும் செய்யலாம். விளையாடுவது கிரிக்கெட் அல்லவா?
|