உலகக் கோப்பை கபடி போட்டி தொடர் வரும் ஜூலை 20 முதல் 28ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது. புதிய கபடி சம்மேளனம் சார்பில் கபடி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தியா, நியூசிலாந்து, தைவான், ஹாங்காங் உள்ளிட்ட 32 ஆண்கள் அணியும் நியூசிலாந்து தைவான் ஹாங்காங் உள்ளிட்ட 18 பெண்கள் அணியும் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர். பெண்கள் அணியில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த குரு சுந்தரி விளையாடவுள்ளார். உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வாழ்த்துவோம்.
|