LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- பகவத்கீதை

பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்

பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்

 1. வாழ்வென்பது உயிர் உள்ளவரை மட்டுமே.

 2. தேவைக்குச் செலவிடு.

 3. அனுபவிக்கத் தகுந்தன அனுவி.

 4. இயன்றவரைப் பிறருக்கு உதவி செய்.

 5. ஜீவகாருண்யத்தை கடைப்பிடி

 6. இனி, அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

 8. மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

 9. உயிர் பிரியத் தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந’்து விடும்.

10. உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு

11. உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.

12. உன் குழந்தைகளைப் பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

13. அவ்வப்போது பரிசுகள் அளி.

 

14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னைக் கவனிக்க இயலாமல் தவிக்கலாம். புரிந்து கொள்.

16. அதைப்போலப் பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்குச் சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர், கடமை மற்றும் அன்பை அறியார்.

19. ‘அவரவர் வாழ்வு அவரவர் விதிப்படி’ என அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்குக் கொடு.

21. ஆனால் நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே.

22. ‘எல்லாமே நான் இறந்த பிறகு தான்’ என உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

23. எனவே, கொடுக்க நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்துவிடு. மேலும் தர வேண்டியதை பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை மாற்ற முயலாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.

26. அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.         

27. பிறரிடம் உள்ள நற்குணங்களைக் கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடைப்பயிற்சி செய்து, உடல்நலம் பேணி, இறைபக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்த உறவாடி. மன நிறைவோடு வாழ்.

30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் சுலபமாக ஓடிவிடும்.

31. வாழ்வைக் கண்டு களி.

32. ரசனையோடு வாழ்.

33. வாழ்க்கை வாழ்வதற்கே.

34. நான்கு நபர்களைப் புறக்கணி 
    மடையன்
    சுயநலக்காரன்
    ஏமாற்றுக்காரன்
    ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.  
    பொய்யன்
    துரோகி
    பொறாமைக்காரன்
    மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே     அனாதை
    ஏழை
    முதியவர்
    நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையைத் தடுக்காதே  
    மனைவி
    பிள்ளைகள்
    குடும்பம்
    சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி 
    பொறுமை
    சாந்த குணம்   
    அறிவு
    அன்பு

39. நான்கு விசயங்களை வெறுக்காதே   
    தந்தை
    தாய்
    சகோதரன்
    சகோதரி

40. நான்கு விசயங்களைக் குறை
    உணவு
    தூக்கம்
    சோம்பல்
    பேச்சு

41. நான்கு விசயங்களைத் தூக்கிப்போடு 
    துக்கம்
    பொறாமை
    இயலாமை
    கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு 
    மனத்தூய்மை உள்ளவன்
    வாக்கை நிறைவேற்றுபவன்     கண்ணியமானவன்
    உண்மையானவன்

43. நான்கு விசயங்களைச் செய் 
    தியானம்
    நூல் வாசிப்பு  
    உடற்பயிற்சி
    சேவை செய்தல்

by Lakshmi G   on 04 Nov 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்! தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்!
பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது! பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது!
வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்! வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்! சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்!
கருத்துகள்
18-Feb-2021 09:57:45 SATHYA said : Report Abuse
PLS ALL BOOK SEND ME
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.