LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

இந்தியாவில் அதிகக் கோயில்களைக் கொண்ட 12 மாநிலங்கள்

இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் இந்து மத கோவில்கள் அதிகம் உள்ளன. மிகப் பழமையான, பிரம்மாண்டமான, அதிசயங்கள், அமானுஷ்யங்கள் நிறைந்த பல கோவில்கள் உள்ளன. இவற்றில் அதிகமான இந்துக்கோவில்களைக் கொண்ட மாநிலங்கள் எவை என்று தெரிந்துகொள்ளலாம். 


தமிழகம் 
தமிழகத்தில் ஏறக்குறைய 79,154 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சுமார் 800 ஆண்டுகள் பழமையானவையாகும். பல்லவர், பாண்டியர், சேர, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களே ஏராளமாக இங்கு உள்ளன. பெரும்பாலான கோவில்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு ம், சில தனியார் அமைப்புக்களால் நிர்வகிக்கப்பட்டும் வருகின்றன.

மகாராஷ்டிரா
அதிகமான இந்துக் கோவில்கள் கொண்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. பாம்பே ஐஐடி நடத்திய ஆய்வின் படி இங்கு 77, 283 கோவில்கள் உள்ளன. ஷீரடி சாய்பாபா கோவில், சித்தி விநாயகர் ஆலயம் சில புகழ்பெற்ற ஆலயங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன.

​கர்நாடகா 
இந்துக் கோவில்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் கர்நாடகா 3வது இடத்தில் உள்ளது. இங்கு 61,232 இந்துக் கோவில்கள் உள்ளன. மூகாம்பிகை கோவில், சாமுண்டீஸ்வரி கோவில், முருதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் இங்கு உள்ளன.

மேற்கு வங்கம்
53,658 கோவில்களுடன் அதிக இந்துக் கோவில்கள் கொண்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா காளி, பிர்லா மந்திர், தக்சிணேஸ்வர் காளி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் மேற்குவங்கத்தில் அமைந்துள்ளன.

​குஜராத் 
குஜராத் மாநிலம் அதிக இந்துக் கோவில்கள் கொண்ட இந்திய மாநிலங்களில் 5வது இடத்தில் உள்ளது. இங்கு 49,995 கோவில்கள் உள்ளன. ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான சோம்நாத் கோவில், நாகேஸ்வரர் கோவில் ஆகியவற்றுடன் துவாரகை ருக்மணி கோவில், துவாரகாதிஷ் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் இங்கு புகழ்பெற்று விளங்குகின்றன.

ஆந்திரா 
47,152 கோவில்களுடன் அதிகக் கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா 6வது இடத்தில் உள்ளது. ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இதுதவிர திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், காளஹஸ்தி சிவன் கோவில், விஜயவாடா கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோவில் உள்ளிட்டவை இங்குள்ள புகழ்பெற்ற தலங்கள் ஆகும்.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம், 39,392 கோவில்களுடன் அதிகக் கோவில்கள் கொண்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. புஷ்கரப் பிரம்மா கோவில், ஜகத் அம்பிகா மாதா கோவில், மெகப்திப்பூர் பாலாஜி கோவில் உள்ளிட்டவை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில்களாகும்.

​உத்திரப் பிரதேசம் :
உத்திரப்பிரதேச மாநிலம், அதிக இந்துக் கோவில்களைக் கொண்ட மாநிலங்களில் 8வது இடத்தில் உள்ளது. இதில் 37,518 கோவில்கள் உள்ளன. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம், அயோத்தி ராமர் கோவில், கிருஷ்ணப் பலராமர் கோவில் ஆகியன இங்குள்ள கோவில்களில் புகழ்பெற்ற கோவில்களில் சில ஆகும். 

ஒடிசா 
ஒடிசா மாநிலம் அதிக இந்துக் கோவில்கள் கொண்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 30,877 கோவில்கள் உள்ளன. புரி ஜெகநாதர் ஆலயம், புவனேஸ்வர் லிங்கராஜ் ஆலயம், சம்பல்பூர் மா சமலேஸ்வரி ஆலயம் ஆகியன ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிலவாகும்.

பீகார் :
அதிக இந்துக் கோவில்கள் கொண்ட மாநிலங்களில் பீகார் 10-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 29,748 கோவில்கள் உள்ளன. மகாபூதி கோவில், விஷ்ணுபத் கோவில், மகாவீர் மந்திர் உள்ளிட்டவை இங்குள்ள புகழ்பெற்ற கோவில்கள் ஆகும்.


தெலுங்கானா 
தெலுங்கானா மாநிலம், அதிக எண்ணிக்கையிலான இந்துக் கோவில்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 28,312 கோவில்கள் உள்ளன. அனந்த பத்மநாப சுவாமி கோவில், பத்ராச்சலம் கோவில், பீச்சு பல்லி ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்கள் இங்குள்ள புகழ்பெற்ற கோவில்கள் ஆகும்.

​மத்தியப் பிரதேசம் 
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 27,947 இந்துக் கோவில்கள் உள்ளன. அதிக இந்துக் கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் 12-ஆவது இடத்தில் உள்ளன. ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான மகாகாலேஸ்வரர் கோவில், ஓம்காரேஸ்வர் கோவில், உஜ்ஜைனி கால பைரவர் கோவில் ஆகியன இங்குள்ள புகழ்பெற்ற கோவில்களாகும்.

 

 

by hemavathi   on 31 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சைவ ஆதீனங்கள் தமிழ்நாட்டின் சைவ ஆதீனங்கள் எத்தனை? சைவ ஆதீனங்கள் தமிழ்நாட்டின் சைவ ஆதீனங்கள் எத்தனை?
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.