|
|||||
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. |
|||||
பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்குச் சிறப்புப் பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த, கடந்த பிப். 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தமாநாடு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அற நிலையத் துறை அலுவலர்கள், ஆன்மிகப் பெரியோர்களை இணைத்து குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து ஆணை பிறப்பிக்குமாறு, அறநிலையத் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்தது. குழுவின் தலைவராக அறநிலையத் துறை அமைச்சர், துணைத் தலைவராகத் துறைச் செயலர், உறுப்பினர்களாக அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர், ஆணையர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திருவண்ணாமலை ஆதீனம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் திருக்கயிலாயப் பரம்பரை திருப் பெருந்திரு சாந்தலிங்க மரு தாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத் திரு குமரகுருபர சுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், ஆன்மிகப் பேச்சாளர் கள் சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, பேச்சாளர் ந.ராம சுப்பிரமணியன், கோவை தரணிபதி ராஜ்குமார் மற்றும் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், பழநி கோயில் அறங் காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். |
|||||
by Kumar on 21 Mar 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|