|
|||||
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? |
|||||
காசிக்கயிறு பாசி படியும் என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு. மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி விநாயகரை வழிபட்டு வேண்டிய வரங்கள் பெற உகந்த நாளாகும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். வளர்பிறையில் வரும் சதுர்த்தி,சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களைப் போக்கும் வல்லமை கொண்டது சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். மாசி மாதத்தில் வரும் சங்கடாஹர சதுர்த்தி நிறையவே விஷேசமாகும்…
தீர்க்க சுமங்கலி வரம் பெறலாம்.
மாசி மாதம் அனைத்துத் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாகும். குறிப்பாகத் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதத்தில் வரும் காரடையான நோன்பு, மகம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் வழிபாடு செய்வார்கள். இந்த நாட்கள் மட்டுமல்ல மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரம் பெறலாம். சங்கடம் போக்கும் விநாயகரை வணங்க ஏற்ற நாள் சங்கடஹர சதுர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த மாதம் மாசி சங்கடஹர சதுர்த்தி பிப்ரவரி 28ஆம் தேதி (மாசி மாதம் 16ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படுகிறது.
காசிக்கயிறு பாசி படியும் என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு. மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
சதுர்த்தியில் விநாயகரை வணங்கும் முறை
விநாயகருக்கு முன்பாகத் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.
விநாயகருக்கு என்ன நிவேதனம் செய்யலாம்
விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்குப் பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.
பலன்கள்
ஏழரைச் சனி, அஷ்டமது சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, ‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். |
|||||
by Kumar on 15 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|