LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

2023-ம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள்

2023-ம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் celebrities-who-died-in-2023
2023 ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர்.  அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன.   அந்த வகையில் 2023-ம் ஆண்டில் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். 
****************************
ஜனவரி
******************************
நடிகர் ராமதாஸ்
******************************
தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ்.   இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கிச் சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.  மேலும் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.  இவர் ஜன.23-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 
******************************
ஜூடோ ரத்னம் 
******************************
பிரபலச் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றிவர் ஜூடோ ரத்தினம் (93).  இவர் 1,500 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.  மேலும் தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.  கொஞ்சும் குமரி, தாமரைக்குளம், போக்கிரி ராஜா, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.  இவர் ஜன.26-ம் தேதி உயிரிழந்தார்.
******************************
நடிகை ஜமுனா
******************************
நடிகை ஜமுனா(86) தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.   நடிகை ஜமுனா சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்குத் தாயாகவும் நடித்துள்ளார்.  இவர் ஜன.27-ம் தேதி உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.
******************************
பிப்ரவரி
******************************
இயக்குநர் சண்முகப்பிரியன்
******************************
பிரபலச் சினிமா இயக்குநராகப் பணியாற்றியவர் ஷண்முகப் பிரியன் (71).  இவர் ஒருவர் வாழும் ஆலயம்,  பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.   வெற்றிவிழா, பிரம்மா ஆத்மா உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை, வசனம் எழுதி உள்ளார்.  இவர் பிப்.2-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
******************************
இயக்குநர் கே. விஸ்வநாத்
******************************
இயக்குநர்க் கே.விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாகச் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.   இவர் தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா. உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.   இவருக்கு இந்தியச் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது.  இவர் பிப்.3-ம் தேதி காலமானார்.
******************************
வாணி ஜெயராம்
******************************
பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் பிப்.4-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.   இவர் படுக்கைக்கு அருகில் இருந்த மேசை மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
******************************
இயக்குநர் டி.பி.கஜேந்திரன்
******************************
பிரபலத் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றியவர் டி.பி.கஜேந்திரன்(68).  இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  டி.பி. கஜேந்திரன் எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.  இவர் பிப்.5-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
******************************
நடிகர் மயில்சாமி
******************************
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி (57).  இவர் நகைச்சுவை மற்றும்  குணச்சித்திர வேடங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் பிப்.19-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
******************************
மார்ச்
******************************
கிடாரிஸ்ட் சந்திரசேகர்
******************************
பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர்- கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர் சந்திரசேகர் (79).  இவர் மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர்.  இவர் மார்ச் 9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
******************************
கோவை குணா
******************************
பிரபலத் தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான 'அசத்தப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா.  இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 21-ம் தேதி உயிரிழந்தார்.
******************************
ஏப்ரல்
******************************
ரமணி அம்மாள்
******************************
நாட்டுப்புறப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமான இருந்தவர் ரமணி அம்மாள் (70).  தமிழ் சினிமாவில் ஜூங்கா படத்தில் இடம்பெற்ற 'ரைஸ் ஆஃப் டான்' பாடல் சண்டக்கோழி 2 படத்தில் 'செங்கரத்தான் பாறையுல' பாடல், காப்பான் படத்தில் 'சிரிக்கி' பாடல், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இடம்பெற்ற 'இன்டர்நெட் பசங்க' போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் ஏப்.4-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
******************************
தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி
******************************
பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரான இருந்தவர் நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55). இவர் நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி, வாலி, முகவரி, சிட்டிசன். ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார்.  இவர் ஏப்.29-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
******************************
மே
******************************
நடிகர் மனோபாலா
******************************
சினிமா இயக்குநர்,  தயாரிப்பாளர்,  நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69).   இவர் 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாகக் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.  இவர் கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 3-ம் தேதி உயிரிழந்தார்.
******************************
நடிகர் செவ்வாழை ராசு
******************************
'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் செவ்வாழை ராசு.   இவர் 'கிழக்குச் சீமையிலே திரைப்படம் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமானவர்.  இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.  இவர் மே 18-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
******************************
நடிகர் சரத்பாபு
******************************
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு (71). தமிழில்,  'நிழல் நிஜமாகிறது'. 'உதிரிப்பூக்கள்'. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  இவர் மே.23-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
******************************
ஜூன்
******************************
நடிகர் கசன் கான்
******************************
தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்  நடிகர் கசன் கான் (50).  இவர் ஜூன் 13-ம் தேதி நடிகர் கசன் கான் மாரடைப்பால் காலமானார்.
******************************
ஆகஸ்ட்
******************************
நடிகர் கைலாஷ் நாத்
******************************
தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கைலாஷ் நாத் (65).  இவர் தமிழில் ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் ஆக.4-ம் தேதி கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
******************************
நடிகை சிந்து
******************************
அங்காடித் தெரு, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சிந்து.  கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறப் போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். வறுமை காரணமாகப் போராடிய அவருக்கு நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் மற்றும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக உதவினர்.  இவர் ஆக.7-ம் தேதி உயிரிழந்தார்.
******************************
இயக்குநர் சித்திக்
******************************
நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சித்திக்.   இவர் கல்லீரல் பிரச்சினைக்காகத் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் ஆக.8-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
******************************
செப்டம்பர்
******************************
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி
******************************
'அபூர்வ சகோதரர்கள்', 'அன்பே சிவம்', 'கார்கி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66).   இவர் 1981-ம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் செப்.2-ம் தேதி காலமானார்.
******************************
நடிகர் மாரிமுத்து
******************************
மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் நடிகர் மாரிமுத்து.  இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும்' , 2014-ம் ஆண்டு வெளியான  'புலிவால்' ஆகிய 2 படங்களை இயக்கினார்.  'எதிர்நீச்சல்' என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார்.  இவர் செப்.8-ம் தேதி சீரியல் டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
******************************
நடிகர் பாபு
******************************
பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'என் உயிர் தோழன்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் பாபு.  இவர் 1991-ம் ஆண்டு ஒரு திரைப்படப் படப்பிடிப்பின் போது, உயரமான பாறையில் இருந்து விழுந்ததில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுத்த படுக்கையாக இருந்தார்.  இவர் செப்.19-ம் தேதி காலமானார்.
******************************
தயாரிப்பாளர் வி.ஏ.துரை
******************************
விக்ரம், சூர்யா, விஜயகாந்த். சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.  இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அக்.3-ம் தேதி காலமானார்.
******************************
இயக்குநர் ஜெய தேவி
******************************
தமிழ் சினிமாவின் பெண் இயக்குநராக வலம்வந்தவர் பிரபல நடிகை ஜெய தேவி.  இவர் ‘நலம் நலமறிய ஆவல்', 'விலங்கு'. 'விலாங்கு மீன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  மேலும்,  'வா இந்த பக்கம்', 'நன்றி மீண்டும் வருக'. 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது'. 'பவர் ஆப் வுமன்' ஆகிய படங்களைத் தயாரித்து இருக்கிறார்.  இவர் அக்.4-ம் தேதி உயிரிழந்தார்.
******************************
கலை இயக்குநர் மிலன்
******************************
பிரபலத் திரைப்படக் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் மிலன்.  இவர் பில்லா. வீரம், வேதாளம், துணிவு, வேலாயுதம், அண்ணாத்த, பத்து தல, விடாமுயற்சி போன்ற பல படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.  இவர் அக்.15-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
******************************
நவம்பர்
******************************
ஜூனியர் பாலையா
******************************
மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70).   இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம்,  சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
******************************
நடிகர் கங்கா
******************************
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கங்கா (63).  இவர் உயிருள்ள வரை உஷா, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.11-ம் தேதி  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
******************************
டிசம்பர்

நடிகை சுப்புலட்சுமி
******************************
கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையாகவும், இசைக்கலைஞராகவும் இருந்தவர் ஆர்.சுப்பலட்சுமி (87).  இவர் தமிழில் பீஸ்ட், விண்ணைத் தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.  இவர் டிச.1-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
******************************
நடிகை லீலாவதி
******************************
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துப் பிரபலமானவர் நடிகை லீலாவதி.  இவர் டிச.8-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
******************************
நடிகர் மதுரை மோகன்
******************************
முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் மதுரை மோகன்.  இவர் டிச.9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
******************************
நடிகர் ரா.சங்கரன்
******************************
நடிகரும், இயக்குநருமாகப் புகழ்பெற்றவர் ரா.சங்கரன் (92).  இவர். புதுமை பெண், மௌனராகம், ஒரு கைதியின் டைரி, சின்ன கவுண்டர். அரண்மனை காவலன், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மௌனராகம் படத்தில் நடிகர் கார்த்திக் இவரை மிஸ்டர் சந்திரமவுலி என்று அழைக்கும் அந்த காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.  இவர் டிச.14-ம் தேதி வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
******************************
நடிகர் போண்டாமணி
******************************
பொன் விலங்கு. பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்துப் பிரபலமானவர் நடிகர் போண்டாமணி (60).  இவர் கடந்த ஒரு வருடமாக 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் இவர் டிச.24-ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
******************************
நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்
******************************
தே.மு.தி.க. நிறுவனரும்,  நடிகருமானவர் விஜயகாந்த் (71).  இவர் நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்த நிலையில்,  டிச.28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சைப் பலனின்றிக் காலமானார்.

2023-ம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள்

2023 ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர்.  அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன.   அந்த வகையில் 2023-ம் ஆண்டில் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி

நடிகர் ராமதாஸ்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ்.   இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கிச் சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.  மேலும் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.  இவர் ஜன.23-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 

ஜூடோ ரத்னம்

பிரபலச் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றிவர் ஜூடோ ரத்தினம் (93).  இவர் 1,500 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.  மேலும் தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.  கொஞ்சும் குமரி, தாமரைக்குளம், போக்கிரி ராஜா, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.  இவர் ஜன.26-ம் தேதி உயிரிழந்தார்.

நடிகை ஜமுனா

நடிகை ஜமுனா(86) தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை ஜமுனா சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்குத் தாயாகவும் நடித்துள்ளார்.  இவர் ஜன.27-ம் தேதி உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.

பிப்ரவரி

இயக்குநர் சண்முகப்பிரியன்

பிரபலச் சினிமா இயக்குநராகப் பணியாற்றியவர் ஷண்முகப் பிரியன் (71).  இவர் ஒருவர் வாழும் ஆலயம்,  பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.   வெற்றிவிழா, பிரம்மா ஆத்மா உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை, வசனம் எழுதி உள்ளார்.  இவர் பிப்.2-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இயக்குநர் கே. விஸ்வநாத்

இயக்குநர்க் கே.விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாகச் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.   இவர் தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா. உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.   இவருக்கு இந்தியச் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது.  இவர் பிப்.3-ம் தேதி காலமானார்.

வாணி ஜெயராம்

பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் பிப்.4-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.   இவர் படுக்கைக்கு அருகில் இருந்த மேசை மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் டி.பி.கஜேந்திரன்

பிரபலத் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றியவர் டி.பி.கஜேந்திரன்(68).  இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  டி.பி. கஜேந்திரன் எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.  இவர் பிப்.5-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் மயில்சாமி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி (57).  இவர் நகைச்சுவை மற்றும்  குணச்சித்திர வேடங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் பிப்.19-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

மார்ச்

 கிடாரிஸ்ட் சந்திரசேகர்

பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர்- கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர் சந்திரசேகர் (79).  இவர் மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர்.  இவர் மார்ச் 9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

கோவை குணா

பிரபலத் தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான 'அசத்தப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா.  இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 21-ம் தேதி உயிரிழந்தார்.

ஏப்ரல்

ரமணி அம்மாள்

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமான இருந்தவர் ரமணி அம்மாள் (70).  தமிழ் சினிமாவில் ஜூங்கா படத்தில் இடம்பெற்ற 'ரைஸ் ஆஃப் டான்' பாடல் சண்டக்கோழி 2 படத்தில் 'செங்கரத்தான் பாறையுல' பாடல், காப்பான் படத்தில் 'சிரிக்கி' பாடல், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இடம்பெற்ற 'இன்டர்நெட் பசங்க' போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் ஏப்.4-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி

பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரான இருந்தவர் நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55). இவர் நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி, வாலி, முகவரி, சிட்டிசன். ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார்.  இவர் ஏப்.29-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

மே

நடிகர் மனோபாலா

சினிமா இயக்குநர்,  தயாரிப்பாளர்,  நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69).   இவர் 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாகக் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.  இவர் கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 3-ம் தேதி உயிரிழந்தார்.

நடிகர் செவ்வாழை ராசு

'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் செவ்வாழை ராசு.   இவர் 'கிழக்குச் சீமையிலே திரைப்படம் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமானவர்.  இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.  இவர் மே 18-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் சரத்பாபு

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு (71). தமிழில்,  'நிழல் நிஜமாகிறது'. 'உதிரிப்பூக்கள்'. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  இவர் மே.23-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

ஜூன்

நடிகர் கசன் கான்

தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்  நடிகர் கசன் கான் (50).  இவர் ஜூன் 13-ம் தேதி நடிகர் கசன் கான் மாரடைப்பால் காலமானார்.

ஆகஸ்ட்

நடிகர் கைலாஷ் நாத்

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கைலாஷ் நாத் (65).  இவர் தமிழில் ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் ஆக.4-ம் தேதி கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

நடிகை சிந்து

அங்காடித் தெரு, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சிந்து.  கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறப் போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். வறுமை காரணமாகப் போராடிய அவருக்கு நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் மற்றும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக உதவினர்.  இவர் ஆக.7-ம் தேதி உயிரிழந்தார்.

இயக்குநர் சித்திக்

நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சித்திக்.   இவர் கல்லீரல் பிரச்சினைக்காகத் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் ஆக.8-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

செப்டம்பர்

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி

'அபூர்வ சகோதரர்கள்', 'அன்பே சிவம்', 'கார்கி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66).   இவர் 1981-ம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் செப்.2-ம் தேதி காலமானார்.

நடிகர் மாரிமுத்து

மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் நடிகர் மாரிமுத்து.  இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும்' , 2014-ம் ஆண்டு வெளியான  'புலிவால்' ஆகிய 2 படங்களை இயக்கினார்.  'எதிர்நீச்சல்' என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார்.  இவர் செப்.8-ம் தேதி சீரியல் டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

நடிகர் பாபு

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'என் உயிர் தோழன்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் பாபு.  இவர் 1991-ம் ஆண்டு ஒரு திரைப்படப் படப்பிடிப்பின் போது, உயரமான பாறையில் இருந்து விழுந்ததில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுத்த படுக்கையாக இருந்தார்.  இவர் செப்.19-ம் தேதி காலமானார்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை

விக்ரம், சூர்யா, விஜயகாந்த். சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.  இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அக்.3-ம் தேதி காலமானார்.

இயக்குநர் ஜெய தேவி

தமிழ் சினிமாவின் பெண் இயக்குநராக வலம்வந்தவர் பிரபல நடிகை ஜெய தேவி.  இவர் ‘நலம் நலமறிய ஆவல்', 'விலங்கு'. 'விலாங்கு மீன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  மேலும்,  'வா இந்த பக்கம்', 'நன்றி மீண்டும் வருக'. 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது'. 'பவர் ஆப் வுமன்' ஆகிய படங்களைத் தயாரித்து இருக்கிறார்.  இவர் அக்.4-ம் தேதி உயிரிழந்தார்.

கலை இயக்குநர் மிலன்

பிரபலத் திரைப்படக் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் மிலன்.  இவர் பில்லா. வீரம், வேதாளம், துணிவு, வேலாயுதம், அண்ணாத்த, பத்து தல, விடாமுயற்சி போன்ற பல படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.  இவர் அக்.15-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

நவம்பர்

ஜூனியர் பாலையா

மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70).   இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம்,  சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

நடிகர் கங்கா

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கங்கா (63).  இவர் உயிருள்ள வரை உஷா, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.11-ம் தேதி  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

டிசம்பர்

நடிகர் கங்கா

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் கங்கா (63).  இவர் உயிருள்ள வரை உஷா, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.11-ம் தேதி  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜூனியர் பாலையா

மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70).   இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம்,  சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் நவ.2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

நடிகை சுப்புலட்சுமி

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையாகவும், இசைக்கலைஞராகவும் இருந்தவர் ஆர்.சுப்பலட்சுமி (87).  இவர் தமிழில் பீஸ்ட், விண்ணைத் தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.  இவர் டிச.1-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகை லீலாவதி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துப் பிரபலமானவர் நடிகை லீலாவதி.  இவர் டிச.8-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் மதுரை மோகன்

முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துப் பிரபலமானவர் நடிகர் மதுரை மோகன்.  இவர் டிச.9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் ரா.சங்கரன்

நடிகரும், இயக்குநருமாகப் புகழ்பெற்றவர் ரா.சங்கரன் (92).  இவர். புதுமை பெண், மௌனராகம், ஒரு கைதியின் டைரி, சின்ன கவுண்டர். அரண்மனை காவலன், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மௌனராகம் படத்தில் நடிகர் கார்த்திக் இவரை மிஸ்டர் சந்திரமவுலி என்று அழைக்கும் அந்த காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.  இவர் டிச.14-ம் தேதி வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

நடிகர் போண்டாமணி

பொன் விலங்கு. பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்துப் பிரபலமானவர் நடிகர் போண்டாமணி (60).  இவர் கடந்த ஒரு வருடமாக 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் இவர் டிச.24-ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவனரும்,  நடிகருமானவர் விஜயகாந்த் (71).  இவர் நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்த நிலையில்,  டிச.28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சைப் பலனின்றிக் காலமானார்.

by   on 12 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.