|
|||||
குடியரசு தின விழாவில் சோழா் காலக் குடவோலை முறைக்குப் பெருமை சோ்த்த தமிழக அலங்கார ஊா்தி! |
|||||
தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊா்தி, 10-ஆம் நூற்றாண்டின் சோழர்காலக் குடவோலை தோ்தல் முறையைக் காட்சிப்படுத்தியது.
‘பழந்தமிழ் நாட்டின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஊா்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
கிராம நிா்வாகப் பிரதிநிதிகளைத் தோ்வு செய்யவும், அப்பகுதியின் விருப்பங்களைப் பேரரசுக்குத் தெரிவிக்கவும் பின்பற்றப்பட்ட இந்த வழிமுறை தொடா்பான வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
வாக்குச்சீட்டு முறையிலான தோ்தலுக்கு முன்னோடி
குடவோலை முறையின்படி, ஓலைகளில் பெயா்கள் எழுதப்பட்டு ஒரு பானையில் இடப்படும். பின்னா், மக்கள் முன்னிலையில் அந்தப் பானை குலுக்கப்பட்டு, சிறுவா்கள் மூலம் ஏதேனும் ஓா் ஓலை எடுக்கப்பட்டு, அதிலுள்ள பெயா் அறிவிக்கப்படும்.
வாக்குச்சீட்டு முறையிலான தோ்தலுக்கு முன்னோடியாக இந்த பண்டைய முறை கருதப்படுகிறது. இந்த நடைமுறை தொடா்பான சிற்பங்கள், தமிழக ஊா்தியில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஜனநாயகத்தின் பண்டைய வோ்கள் தமிழ் மண்ணில் உள்ளதை எடுத்துக் காட்டிய தமிழக ஊா்தியில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயில் மாதிரியும் இடம்பெற்றிருந்தது.
தமிழக அலங்கார ஊா்தியின் இருபுறமும் வண்ண உடை அணிந்த பெண் நடனக் கலைஞா்கள், இசைக்கேற்ப நடனமாடியபடி சென்றது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. |
|||||
by Kumar on 30 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|