LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை

டெங்குக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் நுண்கிருமி [Flavivirus genus – family Flaviviridae] ஒரு வகையான கொசுவினை [Aedes sp. Mosquito Aedes aegypti and Aedes albopictus]  ஊர்தியாகக் கொண்டு மனிதர்களில் நோயினை உண்டாக்குகிறது.

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 5 கோடி பேர் இந்த நோயினால் தாக்கப்பட்டு அதில் கிட்டத்தட்ட 20000 பேர் இறந்து போவதாக உலக நல நிறுவனம் (World Health Organisation) தெரிவிக்கின்றது.

வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80% பேர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படுவதில்லை. 15 – 16 % பேர்களுக்கு சுரம் மட்டும் ஏற்படுகின்றது. 4 – 5 % பேர்களுக்கு நோயின் தீவிர குறிகுணங்கள் ஏற்படுகின்றன. அவை தலைவ்லி, உடல் வலி, மூட்டு வலி, மூக்கிலும் வாயிலும் குருதிக் கசிவு, உள் உறுப்புகளில் குருதிக் கசிவு, தோல் தடிப்புடன் அரிப்பு (மணலம்மை – measles போன்ற தடிப்பு), அதிக குருதிப்போக்கினால் உள் உறுப்புகளில் ஏற்படும் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம்,வலிப்பு போன்றவை. ௦.௦4 % பேர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகின்றது.

தொற்று நோய் ஏற்படுவதும் அதன் தீவிர குறிகுணங்கள் ஏற்படுவதும் இரண்டு முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாக இக்கால மருத்துவ அறிவியல் கூறுகின்றது.

1. நோய்க்கிருமியின் வேகம் (virulence of organism)  

2. ஒருவரின் நோய் எதிர்ப்பாற்றல் (Immunity)

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு  உடல் வலிமை குறைவதுதான் (எதிர்பாற்றல் குறைவுதான்) முதல் காரணம். அதனால்தான் சிலருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமலும் சிலருக்கு அச்சம் ஏற்படுத்தும் குறிகுணங்களும் சிலருக்கு மரணமும் ஏற்படுகின்றது.

டெங்குக்காய்ச்சலுக்கு நேரடியான ஆங்கில மருந்துகளோ தடுப்பு ஊசியோ (vaccines) கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் சித்த மருத்துவத்தில் அதனைக்கட்டுபடுத்தும் மருந்துகளும் தடுக்கும் வழிமுறைகளும் உண்டு என்பது பலருக்குத் தெரியாமல் உள்ளது.

அறிகுறிகள் தெரிந்தால் என்ன  செய்யவேண்டும் ?

டெங்கு காய்ச்சல் என்று உறுதிபடுத்தபடாவிட்டலும் காய்ச்சல் அறிகுறி தோன்றியவுடன் (பெரியவர்களுக்கான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு அளவு குறைத்து கொடுக்கலாம்)

1. நில வேம்புக் குடிநீர் 100 ml  அளவு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை காய்ச்சல் விடும் வரை குடிக்க வேண்டும். 1௦ கிராம் பொடியுடன் 400 மிலி நீர் விட்டு 100 மிலி ஆக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய 3 மணிநேரத்திற்குள் குடித்து விடவேண்டும்.

2. அமுக்கரா சூரணம் 5 கிராம் தேனுடன் சுவைத்து சாப்பிட வேண்டும்.

3. மாதுளை மணப்பாகு 15 ml ஆடாதோடை மணப்பாகு 15 ml நீர் 30ml கலந்து 5 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.

எந்த மருத்துவம் மேற்கொண்டிருந்தாலும் அதோடு இணைத்து இந்த மருந்துகளையும் பயன்படுத்தலாம்.

தீவிர குறிகுணங்கள் ஏற்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்த பல உயர்ந்த சித்த மருந்துகள் உள்ளன. (பிரம்மானந்த பைரவம், விட்ணு சக்கரம், இலிங்க பூபதி, சண்ட மாருதம், படிக லிங்கம் போன்றவை). குறிகுணங்களை கட்டுப்படுத்த தீவிர மருத்துவம் மேற்கொண்டிருந்தாலும் சித்த மருத்துவ ஆலோசனையுடன் இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது நோய் கட்டுப்படும். இறப்பு விகிதம் குறையும்.


நோய் வராமல் தடுக்க என்ன மருந்து சாப்பிட வேண்டும்?

1. நோய் பரவும் காலங்களில் / இடங்களில் நிலவேம்புக் குடிநீர் 50 மிலி அளவு தினம் ஒருவேளை அருந்தவேண்டும்.

2. அமுக்கரா சூரணம் 5 கிராம் அளவு ஒரு வேளை தேனுடன் / கஞ்சியுடன் கலந்து பருகலாம்.

நோய் பரவுவதை எப்படி தடுக்க முடியும்?

டெங்குவிற்கு எந்த தடுப்பூசியும் கிடையாது.

கொசு பெருகாமல் கட்டுப்படுத்துவதும் கடிக்கவிடாமல் தடுப்பதும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும்.

1. காய்ந்த வேப்பிலை சருகு, காய்ந்த எலுமிச்சை தோல், மஞ்சள் தூள், இவற்றை புகையாக்கி தூபம் போடுவதுபோல் செய்தால் கொசு அணுகாது. பலர் குடியிருக்கும்  அடுக்குமாடி வீடுகளிலும் எல்லா வீட்டினரும் ஒரே நேரத்தில் தூபமிடுவதால் அப்பகுதியே கொசு இல்லாத பகுதியாக மாறும். ஒவ்வாமை (allergy)  ஏற்படுத்தாது.  

2. வீட்டின் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைப்பதோடு துளசி, வேம்பு போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம். வேம்பு,மஞ்சள் நீரினை பகலில் எளிதில் காய்ந்துவிடும்வண்ணம் தெளிக்கலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் மேம்பட என்ன  செய்யவேண்டும்?

பல சித்தர் வழி முறைகள் உள்ளன. எளிய இரண்டு முறைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

1. எண்ணைக்குளியல் – பருவ காலங்களுக்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். இதனால் தோலின் எதிர்ப்பாற்றால் கூடும்

தோலின் எதிர்ப்பாற்றல் கூடினால் வைரஸ் தொற்றுடன் கொசு கடித்தாலும் தோலிலேயே அவை தடுக்கப்படும். (Innate resistance of skin - Skin immunity is a property of skin that allows it to resist infections from pathogens. In addition to providing a passive physical barrier against infection, the skin also contains elements of the innate and adaptive immune systems which allows it to actively fight infections. Hence the skin provides defense in depth against infection.)

2. பேதி மருத்துவம் – சித்தர் முறைப்படியான பேதிமருத்துவத்தினால் குடல் தூய்மையாவதொடு உடல் முழுவதும் தூய்மையாகி நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. குடல் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பாக சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. (Gut flora have a continuous and dynamic effect on the host's gut and systemic immune systems. This gut microbial community (microbiota) provides benefits to its host in many ways, including digestion, production of nutrients, detoxification, protection against pathogens and regulation of immune system. The immune system plays a vital role in keeping the body healthy by providing a fine balance between the elimination of invading pathogens and the maintenance of tolerance to healthy self-tissue.)
ஊட்டமான உணவுகள் கீரைகள் காய்கள், பழங்கள் போன்றவையும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், மஞ்சள், வெந்தயம், சீரகம், மல்லி விதை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற அன்றாட வீட்டுப் பொருட்களும் டெங்கு மட்டுமல்லாமல் பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை.

 

- மருத்துவர் ப.செல்வ சண்முகம்

by Swathi   on 02 Nov 2015  0 Comments
Tags: டெங்கு காய்ச்சல்   நில வேம்புக் குடிநீர்   அமுக்கரா சூரணம்   மாதுளை மணப்பாகு   டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்   டெங்கு காய்ச்சல் மருத்துவம்   டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி?  சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd. உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.
டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.