|
|||||
திருப்பத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு. |
|||||
திருப்பத்தூர் மாவட்டம் காதிலி என்ற கிராமத்தில் காளான் வடிவத்திலேயே பாறைகள் கண்டறியப்பட்டுள்ளது.
காளான் பாறை
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு காளான் வடிவத்திலேயே இங்குப் பாறைகள் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, இஸ்ரேல் நாடு நிகோல் டிம்னா பூங்காவில், இத்தகைய காளான் வடிவத்தில் பாறைகள் உள்ளன.
அதேபோன்று இந்தியாவில், தார் பாலைவனத்திலும் இந்தப் பாறைகள் உள்ள நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்தியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்ற இடத்திலும் கண்டறியப்பட்டன.
பூஜைகள்
இந்தப் பாறைகளுக்கு விசேஷப் பூஜை நடைபெறுமாம்.. இங்குள்ள கோயிலில் விழா நடத்தும்போதெல்லாம், இந்தப் பாறையின் பக்கத்தில் பக்தர்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்களாம். குடையைப் போல, காளான் மாதிரி இருந்தாலும், இது நிஜமான பாறை.. அதுவும் கடினமான, மென்மையான, அடுக்குகளைக் கொண்ட பாறை...
காற்றால் கடத்தி வரப்படும் மணல் துகளால் தாக்கப்பட்டு, நாளடைவில் அந்தப் பாறைகளின் கீழ்ப்பகுதி மணல் அரிப்பால் சேதமடைந்து, காளான் போன்ற வடிவில் அமைந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். நீண்டகால அரிப்பினால் பாறை தூணானது தரையை ஒட்டி மட்டும் அரிப்புக்கு உள்ளாகி, மேற்புறம் விரிந்த நிலையில் காளான் போன்று தோற்றமளிப்பதால், இதை காளான் பாறை என்கிறார்கள்.
விவசாயி
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில், அதே கந்திலி பகுதியில் இன்னொரு அதிசயம் நடந்துள்ளது.. கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.. இவர் ஒரு விவசாயி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பைப்லைன் அமைக்கப் பள்ளம் தோண்டியிருக்கிறார்.. அப்போது சிறிய அளவிலான கொப்பரைகள் மற்றும் மண் சுவடுகள், மண் பாத்திரங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், ஈமப்பேழை போன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன..
இதைக்கேள்விப்பட்டு அந்தப் பகுதி மக்களும் ஒன்று திரண்டு வந்தனர்.. பிறகு, ஊராட்சி மன்றத் தலைவர், தாசில்தாருக்கு இதுகுறித்து சீனிவாசன் தெரிவிக்கவும், அவர்களும் விரைந்து வந்தனர். மேலும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொருட்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் சொன்னபோது, "இந்தப் பொருட்கள் எல்லாம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். பெருங்கற்காலத்தில் யாராவது இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்யும்போது, அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும், அவர்களுடனேயே வைத்து அடக்கம் செய்யும் பழக்கம் அன்று இருந்துள்ளது.
கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், ஈமப்பேழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், இவை திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றினைச் சேர்ந்ததாக இருக்கலாம்.. எனினும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த இடத்தில் முறையான அகழாய்வினை மேற்கொள்ளும்போது, இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரலாம்' என்றார். |
|||||
by Kumar on 07 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|