|
|||||
உலகத்தாய் தமிழ் அகரம்" நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு |
|||||
தமிழ் எழுச்சிப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர், முனைவர்.பா.இறையரசன் எழுதிய உலகத்தாய் தமிழ் அகரம்" நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு "NATURAL LANGUAGE TAMIL" நூல் அறிமுக விழா 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை கோ. கண்ணன் (வரலாற்றறிஞர்) வரவேற்று நூல் அறிமுக உரை நிகழ்தினார். குடந்தை பாராளு மன்ற மேலவை உறுப்பினர் க.கலியாணசுந்தரம் கலந்துக்கொண்டு விழாவுக்கு தலைமை ஏற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
கோ.கண்ணனுக்கு பாராட்டு
விழாவில் முனைவர்.பா.இறையரசன் உலகத் தமிழர்களுக்கு தமிழ் மொழியின் பெருமையை கொண்டுசேர்க்க எழுதிய "உலகத்தாய் தமிழ் அகரம்" என்ற இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வரலாற்றுத் தரவுகளை தொடர்ந்து எழுதிவரும் ஆய்வறிஞர் தஞ்சை கோ.கண்ணனுக்கு பாராட்டுக்கள் தெறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விழாவில் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி திருக்குறள் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கி விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்.
இந்த விழாவை தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற செல்வி நிலா சரவணராசா தொகுத்து வழங்கினார்.
உதவும் என்பதில் ஐயம்மில்லை
உடையாளூர்இ ராசராசன் வரலாறு பண்பாட்டுக்கழக நிறுவனர் சி.க.சீதரன், விழாவில் செம்மொழி நிறுவன முன்னாள் உதவித் தலைவர் முனைவர் க. இராமசாமி, திருவாரூர் பாவாணர் பதிப்பகம், தமிழ்த்திரு த. இரெ. தமிழ் மணி, அச்சகத்தர் விடாரண்யம், ஓவியர்: திருமதி பவானி இராசதுரை, செல்வி -வைணவி பொன்னுச்சாமி, பன்னாட்டுத் தமிழர் பேரவை மற்றும் புரவலர் தமிழ் எழுச்சிப் பேரவை தலைவர்சரவணராசா பொன்னுச்சாமி உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
உலகத் தமிழர்களுக்கு தமிழ் மொழியின் பெருமையை கொண்டுசேர்க்க ஆய்வாளர்களுக்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உதவும் என்பதில் ஐயம்மில்லை. |
|||||
by Kumar on 28 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|