|
||||||||
நாட்டு மாட்டு சாணத்தில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம்... செலவும் மிக மிக குறைவுதான்... |
||||||||
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ நாட்டு மாட்டு சாணம் தேவை... 40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்.. நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி. கால அவகாசம் முப்பது வருடம். இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை. இதற்கான செலவு 1850 கோடிகள். இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை விவசாயத்தில் 1850 கோடியில் நாம் எடுக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக கிடைக்கும் பலன்கள், 1) கலப்படம் இல்லாத பால் வளம் பெருகும். 2) இயற்கை விவசாயிகள் வாழ்வு மேம்படும். 3) இயற்கை வளம் மேம்படும். 4) விவசாயம் செழிக்கும். 5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது. 6) ஆறுகள் அழியாது. 7) கோவில்கள் அழியாது. 8) தெப்பகுளங்கள் அழியாது 9) பண்டைய வரலாறு காப்பாற்றப் படும். 10) நாட்டு மாடுகள் போற்றப்படும். 11) மாடு பலி ஆவது குறையும். 12) உலக நாடுகளை நம்பி நாம் வாழ வேண்டியது இல்லை. 13) தாய் மண் மலடு ஆகாது. 14) விவசாயிகள் எண்ணை கம்பெனி அதிபர்கள் ஆவார்கள். 15) உலகமே தன் நிலை மாறும். 16) மக்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். 17) தமிழகத்தை கண்டு பாரதமே மாறும். 18) அரசியல்வாதிகளை விட விவசாயிகள் பணம் கொள்வதால் மனிதர்களின் குணம் இவைகளை கண்டு மாறுபடும். 19) நம் முன்னோர்களின் மனம் குளிரும். 20) பல உயிர்களை காப்பாற்றி வாழ வைத்த புண்ணியம் கிடைக்கும். 21) அபரிதமான வேலை வாய்ப்பு பெருகும். முப்பது வருடத்தில் தீர்ந்து போகும் மீத்தேன் தேவையில்லை. சந்ததிகளுக்கு ஆண்டாண்டுக்கும் கிடைக்கக் கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை. உலக வழியில் நாம் வேண்டாம். நம் வழியில் உலகம் மாறட்டும். புரியாதவர்களுக்கு புரிய வைப்போம். அறியாமை இருளை அகற்றுவோம். எனது போராட்டம் யாரையும் எதிர்த்து அல்ல. தாய் மண்ணை வாழ வைக்க. செய்ய வேண்டியது... 1) தண்ணீரை தட்டுப்பாடு இன்றி செய்ய நதிகளை இணைக்க வேண்டும் அல்லது காவேரி பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். 2) சோலாரில் மோட்டார் இயங்க அதிக மானியம். 3) இலவச மின்சாரத்தை ரத்து செய்து ஞாயமான விலையில் 24 மணி நேரமும் தட்டுப்பாடு இன்றி மின்சாரம். 4) ராணுவத்துக்கு நிகரான விவசாய கடன் 3% வட்டியில் ஒதுக்கீடு. எந்த நாடு நம்மை விட முன்னேறுகிறது என பார்ப்போம். அன்னியனுக்கு சலுகை கொடுத்து உயர்த்துவதை என் மக்களுக்கு சலுகை தந்து வாழ்வை உயர்த்துங்களேன் என்பதே என் பாதம் பணிந்த வேண்டுகோள். இதே அளவில் போட வேண்டும் என அவசியும் இல்லை.அவரவர் சக்திக்கு ஏற்பவும் திட்டம் போடலாம். வாழ்க வையகம். என்றும் அன்புடன்... T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
மாட்டு சாணத்தில் இருந்து மீத்தேன் தயாரிப்பு முறை பற்றி அறிய : http://farmwaste.blogspot.in/2013/05/how-to-produce-methane-gas-using-cow.html |
||||||||
by Swathi on 02 Mar 2017 5 Comments | ||||||||
Tags: Methane Gas How to make Methane Gas Methane Gas Production Produce Electricity from Cow Dung Cow Dung How to Manage Cow Dung Bio Gas | ||||||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|