LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருவாரூரில் 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து மூதாட்டி சாதனை

திருவாரூரில் 81 வயது மூதாட்டி 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த ஜெயராமன்(91) மனைவி சரஸ்வதி(81). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், யோகா பயிற்சியாளராக உள்ள இவரது 2-வது மருமகள் பிரேமாவிடம்(50) கடந்த 10 ஆண்டுகளாக ஜெயராமன், சரஸ்வதி ஆகியோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

 

 2018-ல் இந்த தம்பதி 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பெற்றனர். இந்நிலையில், சரஸ்வதி நேற்று முன்தினம் கீரனூரில் உள்ளவைநிதி சேவாலயா பயிற்சி மையத்தில் 45 நிமிடங்கள் 59 விநாடிகளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தார்.

 

விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தச் சாதனை

 

 அவருடன் இணைந்து, இணையம் மூலம் யோகா பயின்று வரும் மாணவ, மாணவிகளும் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்தனர். இந்நிகழ்வை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சார்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடுவர் சகாயராஜ் பங்கேற்று, பதிவு செய்தார். தொடர்ந்து, அந்த அமைப்பு சார்பில் சரஸ்வதிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

 

இதுகுறித்து சரஸ்வதி கூறும் போது, "எங்களைச் சுறுசுறுப்பாக வைத்துள்ள யோகாவை முதியோரும், இளைய தலைமுறையினரும் கற்றுக்கொண்டு, உடல் நலத்துடன் வாழ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தச் சாதனை முயற்சியை மேற்கொண்டேன்" என்றார்.

by Kumar   on 09 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.