LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

இதுதான் இந்திய மூளை…!

கதை என்ற உடனே சிலருக்கு ஆர்வம் வரும், சிலருக்கு தூக்கம் வரும். இங்கே சத்குரு சொல்லும் இந்த இரண்டு குட்டிக் கதைகளைப் படித்தால் சிரிப்புடன் நல்ல சிந்தனையும் எழும் என்பதில் சந்தேகமில்லை. 
சத்குரு:
எனக்கு 40 வேண்டும்
ஒரு சமயத்தில் சவுதி அரேபியாவில் ஒரு இந்தியன், ஒரு நேபாளி, ஒரு பாகிஸ்தானி இரகசியமாக மது அருந்திக் கொண்டிருந்தார்கள். சவுதியில் மது அருந்துவது சட்டப்படி குற்றம். சிறிது நேரத்திற்குள் காவலர்கள் வந்து அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். நீதிபதி அவர்களுக்குத் தலா 20 கசை அடிகள் முதுகில் கொடுக்குமாறு உத்தரவளித்தார். அன்றைக்கு ஒரு விசேஷமான நாள். சவுதி இளவரசரின் நான்காவது மனைவியின் பிறந்த நாள். எனவே இளவரசர் அவர்களுக்கு கசைஅடி வழங்கும் முன்னர், ஏதாவது ஒரு சலுகை கேட்டுப் பெறலாம் எனக் கூறினார்.
முதலில் பாகிஸ்தானி. “என் முதுகில் தலையணை கட்டிக் கொள்ள அனுமதி வேண்டும்” என்றான். பின்னர் முதுகில் தலையணை கட்டி அதன் மேல் சாட்டையடி கொடுக்கப்பட்டது. ஏழாவது, எட்டாவது அடியிலேயே தலையணை பிய்ந்து மிச்ச அடிகள் அவன் முதுகில் விழுந்தன. அடுத்து நேபாளி. “எனக்கு முதுகில் இரண்டு தலையணைகள் வேண்டும்” என்றான். முதுகில் இரு தலையணைகள் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டது. 12, 13ஆவது அடியில் தலையணை பிய்ந்து மிச்ச அடிகள் அவன் முதுகில் விழுந்தன.
கடைசியாக இந்தியனிடம் இளவரசர் சொன்னார், “உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா என்பதால் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்”. இந்தியன் சொன்னான்.“ எனக்கு 40 கசையடிகள் வேண்டும்.”. இளவரசர் வியப்படைந்தார். “40 அடிகளா?”. “ஆம் இளவரசே! 40 அடிகள் வேண்டும்” என்றான். சரி இரண்டாவது விருப்பமென்ன? “அந்த பாகிஸ்தானியை என் முதுகோடு சேர்த்துக் கட்டுங்கள்!”
முடிவு வந்துவிட்டது!
ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில் ‘கவனம், முடிவு வந்து விட்டது, திரும்பிச் செல்லவும்‘ என்று எழுதியிருந்தது. அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில் ‘கிறீச்‘சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டிவந்த இளைஞன் வெளியே எட்டிப்பார்த்து, ‘உங்கள மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே, எப்பப் பார்த்தாலும் கவனமா இரு, இப்படி செய், அப்படி நடன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பீங்களே, தலைவலி’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது. அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாக சொன்னார், “ம், பாலம் பழுதடைந்துவிட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்”.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.