LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜீவா என்ன கதை - சொல்கிறார் சுசீந்திரன் !!

சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்னு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் உருவாக்கி வரும் படம் ஜீவா. 


இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை மையமாக வைத்து படம் எடுத்த சுசீந்திரன் இந்த படத்தில், கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறாராம்.


இந்த படத்தின் கதை குறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது: 


கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் உயிராக மாறிவிட்டது. இங்குள்ள எல்லோருக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரனோ, ரசிகனோ இருக்கிறான். 


துடிப்பான இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார்கள். செலக்ஷன் அரசியலில் அடிப்பட்டு கிரிகெட்டையே மறந்துடுறாங்க. 


கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியருத்தனோட வலிதான் படம்.


50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையை தேடி எங்கே போவான் அதை பேசுகிற படம்.


எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துபோவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்து போறாங்க. அதைத்தான் படம் பேசப்போகுது என உருக்கமாக கூறினார்  சுசீந்திரன்.

by Swathi   on 03 Sep 2014  0 Comments
Tags: ஜீவா திரைப்படம்   ஜீவா கதை                 
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.