LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தேசிய திரைப்பட விருதுகள் 2023

திரைமறைவில் படமாக்கப்படும் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு முன்புவரை மக்களுக்கு ஆச்சரியத்தை வழங்கிவந்தன. அதாவது, டாக்கீஸ்கள் என்றழைக்கப்பட்ட சினிமா கொட்டகைகளில் கருப்பு-வெள்ளை திரைப்படம் பார்த்தபோது அதன் தொழில் நுட்பத்தை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிளந்து பார்த்திருந்த பாமரர்கள் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுடன் பயணிப்பவர்களைபோலவே கருதினர். தொழில்நுட்பம் சற்று வளர்ச்சியடைந்து திரையரங்கங்கள் ஆதிக்கம் செய்ய தொடங்கியதும். பெரிய அளவிலான வெண்திரையில் வண்ணப்படங்களை பார்க்கத்தொடங்கினர். கருப்பு-வெள்ளை படங்களெல்லாம் கலர் படங்களாக மாறின. நடிகர்கள், நடிகைகள் ரசிகர்களின் ரத்தம், தசை நரம்புகளில் ஊறியவர்களாகினர். 

துப்பாக்கியால் சுடப்படுவது, கத்தியால் குத்தப்படுவது, ஆக்ரோஷமாக சண்டையிடுவது, உயர்ந்த இடங்களில் இருந்து குதிப்பது உள்ளிட்ட திரைமறைவில் நடிக்கும் நடிகர்களின் சாகசங்களை உண்மை என்றே நம்பி கதறி அழுத ரசிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதாவது திரைப்பட தொழில் நுட்பம் தெரியாதவரை அவை அனைத்தும் சாகசங்களே. 
பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் என்ற சூழல் இருந்தபோது, விசேஷங்கள், பண்டிகைகளின்போது குடும்பம், குடும்பமாய் திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டுகளிப்பது ஒரு திருவிழாவைபோலவே இருக்கும். தொலைக்காட்சி பெட்டிகள் வரத்தொடங்கி, கேபிள்கள் வாயிலாக சேனல்கள் வரத்தொடங்கியதும் வீட்டின் வரவேற்பறைக்கே அனைத்தும் வந்துவிட்டன.
திரைமறைவில் இருந்த நடிகர், நடிகைகளின் பேட்டி என தொலைக்காட்சிகளில் வரத்தொடங்கி சினிமாவை மிக அருகில் கொண்டுவந்து சேர்த்தது. அதுமட்டுமா திரைப்பட ஆக்கம் என்ற சிறப்பு காட்சிகளில் திரைப்படமாக்கப்பட்ட விதம் விளக்கப்பட்டது. நடிகரின் வாயில் வருவது ரத்தமல்ல, குத்தியது கத்தியல்ல, குதித்தது உயரமல்ல என்றதை அறிந்தபோது திரைப்படத்தின் தந்திரங்களை புரிந்துகொண்டனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வர்ந்து கைபேசிகள் வந்துவிட்டபிறகு அந்தரங்கங்கள் கூட வெளியரங்கமாகிவிட்டன. உலகம் கைக்குள் வந்துவிட்டது. நேரடி ஒளிபரப்பு என்ற வகையில் எல்லா நிகழ்ச்சிகளையும் காணலாம். அந்த வகையில் தற்போது திரைப்படங்களின்  ஓட்டுமொத்த ரகசியங்களையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தற்போது, ரசிகர்களின் பார்வை பெரிய அளவில் மாறியுள்ளது. திரைப்படங்ளை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் பின்னணி இசை அதாவது "ரீரெக்கார்டிங்" இசை மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதாவது, நடிகர்களை மட்டுமே அறிந்திருந்த தலைமுறைகளை தாண்டி தொழில்நுட்பங்களை அலசும் தலைமுறை வந்திருக்கிறது.
இதனிடையே நடிகர்களின் உழைப்பையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தற்போது விருதுகள் வழங்கி கவுரவிக்க தொடங்கியுள்ளது.
முதல் விருது வழங்கிய வரலாறு
தேசிய திரைப்பட விருதுகள் 1954-ம் ஆண்டு “மாநில விருதுகள்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது . அப்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் சிறந்த படங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. 1967-ல், திரைப்படங்களில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கத் தொடங்கியது. சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் நடிகர் நர்கிஸ் ராத் அவுர் தின் படத்தில் நடித்ததற்காக, உத்தம் குமார் சிறந்த நடிகருக்கான விருதை ஆண்டனி ஃபிரிங்கி மற்றும் சிரியகானாவுக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
69வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 
69-வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்திற்காக அல்லுஅர்ஜுன், சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர்( பிரேம் ரஷித்). சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்) தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்)- புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதிற்கு சிறந்த பாடலுக்கன விருது அறிவிக

திரைமறைவில் படமாக்கப்படும் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு முன்புவரை மக்களுக்கு ஆச்சரியத்தை வழங்கிவந்தன. அதாவது, டாக்கீஸ்கள் என்றழைக்கப்பட்ட சினிமா கொட்டகைகளில் கருப்பு-வெள்ளை திரைப்படம் பார்த்தபோது அதன் தொழில் நுட்பத்தை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிளந்து பார்த்திருந்த பாமரர்கள் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுடன் பயணிப்பவர்களைபோலவே கருதினர்.

தொழில்நுட்பம் சற்று வளர்ச்சியடைந்து திரையரங்கங்கள் ஆதிக்கம் செய்ய தொடங்கியதும். பெரிய அளவிலான வெண்திரையில் வண்ணப்படங்களை பார்க்கத்தொடங்கினர். கருப்பு-வெள்ளை படங்களெல்லாம் கலர் படங்களாக மாறின. நடிகர்கள், நடிகைகள் ரசிகர்களின் ரத்தம், தசை நரம்புகளில் ஊறியவர்களாகினர். துப்பாக்கியால் சுடப்படுவது, கத்தியால் குத்தப்படுவது, ஆக்ரோஷமாக சண்டையிடுவது, உயர்ந்த இடங்களில் இருந்து குதிப்பது உள்ளிட்ட திரைமறைவில் நடிக்கும் நடிகர்களின் சாகசங்களை உண்மை என்றே நம்பி கதறி அழுத ரசிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதாவது திரைப்பட தொழில் நுட்பம் தெரியாதவரை அவை அனைத்தும் சாகசங்களே. 

பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் என்ற சூழல் இருந்தபோது, விசேஷங்கள், பண்டிகைகளின்போது குடும்பம், குடும்பமாய் திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டுகளிப்பது ஒரு திருவிழாவைபோலவே இருக்கும். தொலைக்காட்சி பெட்டிகள் வரத்தொடங்கி, கேபிள்கள் வாயிலாக சேனல்கள் வரத்தொடங்கியதும் வீட்டின் வரவேற்பறைக்கே அனைத்தும் வந்துவிட்டன.

திரைமறைவில் இருந்த நடிகர், நடிகைகளின் பேட்டி என தொலைக்காட்சிகளில் வரத்தொடங்கி சினிமாவை மிக அருகில் கொண்டுவந்து சேர்த்தது. அதுமட்டுமா திரைப்பட ஆக்கம் என்ற சிறப்பு காட்சிகளில் திரைப்படமாக்கப்பட்ட விதம் விளக்கப்பட்டது. நடிகரின் வாயில் வருவது ரத்தமல்ல, குத்தியது கத்தியல்ல, குதித்தது உயரமல்ல என்றதை அறிந்தபோது திரைப்படத்தின் தந்திரங்களை புரிந்துகொண்டனர்.

இத்தோடு நின்றுவிடவில்லை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வர்ந்து கைபேசிகள் வந்துவிட்டபிறகு அந்தரங்கங்கள் கூட வெளியரங்கமாகிவிட்டன. உலகம் கைக்குள் வந்துவிட்டது. நேரடி ஒளிபரப்பு என்ற வகையில் எல்லா நிகழ்ச்சிகளையும் காணலாம். அந்த வகையில் தற்போது திரைப்படங்களின்  ஒட்டுமொத்த ரகசியங்களையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது, ரசிகர்களின் பார்வை பெரிய அளவில் மாறியுள்ளது. திரைப்படங்ளை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் பின்னணி இசை அதாவது "ரீரெக்கார்டிங்" இசை மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதாவது, நடிகர்களை மட்டுமே அறிந்திருந்த தலைமுறைகளை தாண்டி தொழில்நுட்பங்களை அலசும் தலைமுறை வந்திருக்கிறது.

இதனிடையே நடிகர்களின் உழைப்பையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தற்போது விருதுகள் வழங்கி கவுரவிக்க தொடங்கியுள்ளது.

முதல் விருது வழங்கிய வரலாறு

தேசிய திரைப்பட விருதுகள் 1954-ம் ஆண்டு “மாநில விருதுகள்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது . அப்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் சிறந்த படங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. 1967-ல், திரைப்படங்களில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கத் தொடங்கியது. சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் நடிகர் நர்கிஸ் ராத் அவுர் தின் படத்தில் நடித்ததற்காக, உத்தம் குமார் சிறந்த நடிகருக்கான விருதை ஆண்டனி ஃபிரிங்கி மற்றும் சிரியகானாவுக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

69வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 

69-வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்திற்காக அல்லுஅர்ஜுன், சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர்( பிரேம் ரஷித்). சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்) தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்)- புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதிற்கு சிறந்த பாடலுக்கன விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கருவறை ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த தமிழ்படம் - 'கடைசி விவசாயி' (மணிகண்டன்)....உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

by Kumar   on 05 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பாடகி உமா ரமணன் காலமானார். பாடகி உமா ரமணன் காலமானார்.
சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு. சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு.
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.