LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாடகி உமா ரமணன் காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபலப் பின்னணிப் பாடகி உமா ரமணன், 72 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். திரை உலகில் பின்னணிப் பாடகிகளில் இவரது குரல் வித்தியாசமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. இதற்காக இவருக்கு அதிகமான வாய்ப்புகளை இளையராஜா வழங்கினார்.

 

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே மே 1-ம் தேதி காலமானார்.

 

இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இ குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1978ல் கிருஷ்ண லீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.

 

பின்னர் நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிகப் பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களைப் பாடி உள்ளார்.

 

கடந்த 50 ஆண்டுகளில் சினிமா தவிர்த்து கணவர் ரமணனுடன் இணைந்து 6 ஆயிரம் மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசைத் துறையைச் சார்ந்தவர் தான். அவரது இசையில் வெளியான 'நீரோட்டம்' படத்திலும் கணவருடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். ரமணனும் பாடல்கள் பாடி உள்ளார். நிறையப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

 

சினிமா, தங்களது இசைக் குழு தவிர்த்து வேறு பொது வெளியில் உமா ரமணன் பெரியளவில் வர மாட்டார். எந்த ஒரு சமூகவலைத்தளங்களிலும் அவர் இல்லை. ஊடகம் உள்ளிட்ட எந்த ஒரு தளத்திலும் அவர் பேட்டி கொடுத்தது இல்லை.

 

உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று(மே 2) மாலை நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

உமா ரமணன் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்...

 

01. பூங்கதவே தாழ் திறவாய்... - நிழல்கள்

 

02. ஆனந்த ராகம்...- பன்னீர் புஷ்பங்கள்

 

03. பூபாளம் இசைக்கும்... தூரல் நின்னு போச்சு

 

04. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு... - மெல்ல பேசுங்கள்

 

05. கஸ்தூரி மானே... - புதுமைப் பெண்

 

06. நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி

 

07. ஆகாய வெண்ணிலாவே... அரங்கேற்ற வேளை

 

08. பொன் மானே கோபம் ஏனோ... - ஒரு கைதியின் டைரி

 

09. கண்மணி நீ வர காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு

 

10. ராக்கோழி கூவையில... ஒரு தாயின் சபதம்

 

11. ஏலேழம் குயிலே... - பாண்டி நாட்டு தங்கம்

 

12. பூத்து பூத்து குலுங்குதடி... கும்பக்கரை தங்கையா

 

13. பூங்காற்று இங்கே வந்து... வால்டர் வெற்றிவேல்

 

14. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - நந்தவன தேரு

 

15. கண்ணும் கண்ணும் தான்... - திருப்பா ஆசை ராஜா ஆரிராரோ... - மூடுபனி

 

17. கல்வியில் சரஸ்வதி... - குடும்பம் ஒரு கதம்பம்

 

18. மஞ்சள் வெயில் மாலை... - நண்டு

 

19. அமுதே தமிழே அழகிய மொழியே... - கோயில் புறா

 

20. செவ்வரளி தோட்டத்திலேயே... - பகவதிபுரம் ரயில்வேகேட்

 

21. தாழம்பூவே கண்ணுறங்கு...இன்று நீ நாளை நான்

 

22. காதில் கேட்டது ஒரு பாட்டு... - அன்பே ஓடி வா

 

23. தாகமே உண்டானதே... கெட்டிமேளம்

 

24. ஸ்ரீரங்கநாதனின்... - மகாநதி

 

25. ஆறும் அது ஆழமில்ல... - முதல் வசந்தம்

 

26. இனிமேலும் நல்ல நேரம் தான்... - பொன்மனச் செல்வன்

 

27. உன்ன பாத்த நேரத்துல... மல்லுவேட்டி மைனர்

 

28. குயிலே குயிலே சின்னசிறு குயிலே... - புலன் விசாரணை

 

29. ஓ உன்னாலே நான்... - என்னருகில் நீ இருந்தால்

 

30. முத்தம்மா முத்து... - தந்துவிட்டேன் என்னை

 

31. கண்மணிக்குள் சின்ன சின்ன.. சின்ன மாப்பிள்ளை

 

32. இது மானோடு மயிலாடும் காடு -எங்க தம்பி

 

33. தண்ணீரிலே முகம் பார்க்கும்... - மணிக்குயில் 

 

34. சந்தன கும்பா உடம்புல... - பொன்விலங்கு

 

35. சிங்காரம்மா நல்ல... - பெரிய மருது

 

36. ஊரடங்கும் சாமத்திலே... - புதுப்பட்டி பொன்னுத்தாய்

 

37. பூச்சூடும்... - ஆணழகன்

 

38. நில் நில் பதில் சொல் சொல்... - பாட்டு பாடுவா

 

39. வா சகி வா சகி... அரசியல்

 

40. இது என்ன இது என்ன புது உறவா... - சிவகாசி

 

ஏவி ரமணன் வேண்டுகோள் 

 

உமா ரமணனின் கணவர் ஏவி ரமணன் வெளியிட்ட வீடியோவில், "எனது மனைவி உமா ரமணன் இறைவனடி சேர்ந்தார். மே 1ம் தேதி மாலை அவர் இறப்பார் என நானும், எனது மகனும் கனவிலும் நினைக்கவில்லை. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் வருவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். தனியுரிமை காரணமாக இந்த வேண்டுகோளை உங்களுக்கு வைக்கிறேன். இது உமா ரமணனின் ஆசையும் கூட" எனத் தெரிவித்துள்ளார்.

 

உடல் தகனம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு உமா ரமணின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

by Kumar   on 05 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு. சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு.
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.