|
|||||
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் |
|||||
நவம்பர் 3, திரைக்கு வரும் "லைசென்ஸ்" திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் நடிகர்கர்களை நம்பி இயங்கும் சினிமா துறையில், கதைகளை நம்பி, புதிய முகங்களைக்கொண்டு களம் காணும் சிறு முதலீட்டு திரைப்படங்களும் வெற்றியடைவது மிகவும் அவசியம். நல்ல கதைகளை எடுத்து, நேர்த்தியாக சொல்லப்படம் படங்கள் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வெற்றியடைவதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வரும் "லைசென்ஸ்" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைய வாழ்த்துகிறோம். இப்படத்தில் புகழ்பெற்ற மக்களிசைப் பாடகி ராஜலெட்சுமி செந்தில்கணேஷ் கதையை சுமந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் அவரது நடிப்பு மிக அருமையாக வெளிப்பட்டுள்ளதை திரைப்படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறது. மேலும் ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் வரும் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தை புதிய கதைகளை நேர்த்தியாக வெளிப்படுத்தும் இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். தொடர் எழுத்துப்பயணத்தில் மெருகேறிய வலிமைமிகு வரிகளால் அனைத்து பாடல்களையும் எழுதி வலுசேர்த்துள்ளார் பாடலாசிரியர் ரமணிகாந்தன். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தம், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன், இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப் . வரும் நவம்பர் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.. |
|||||
by Swathi on 31 Oct 2023 0 Comments | |||||
Tags: லைசன்ஸ் license Rajalakshmi Radha Ravi Ganapathy Balamurugan | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|