டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் வீரரான ஜாக் காலிஸ் இதுவரை 165 டெஸ்ட் போட்டிகளில் 13,174 ரன்களும், 325 ஒரு நாள் போட்டிகளில் 11,574 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 44 சதங்களும். 58 அரைசதங்களும், ஒரு நாள் போட்டிகளில் 17 சதம் மற்றும் 86 அரைசதங்களும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 292 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில்273 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், 38 வயதான காலிஸ் இந்தியாவுக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
|