LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    உடற்பயிற்சி Print Friendly and PDF

உடற்பயிற்சி பற்றி தெரிந்ததும்! தெரியாததும்!

அன்றைய காலத்தில் நமது முன்னோர்கள் கடுமையான வேலைகளை செய்ததால் அவர்களில் சிலருக்கு உடற்பயிற்சியின் அவசியம் இருந்திருக்காது. ஆனால் இன்றைய நிலையில் நாம் அனைவருக்குமே உடற்பயிற்சி தேவையான ஒன்றாகிவிட்டது. உடற்பயிற்சியை துவங்கும் முன் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் தொலைகாட்சியில் காணும் சில விளம்பரங்கள் பத்தே நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம் என்றும், எங்களது உடற்பயிற்சியை தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும் என்றும் கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை களைந்து, தெளிவு பெற்று, அனைவரும் நோயற்ற வாழ்வு பெறவேண்டும் என்பதற்காக ஒரு சிறிய முயற்சியாகும்.


தொப்பையை குறைக்க வயிற்று பகுதியில் உடற்பயிற்சி செய்தால் போதுமா ?

நம்மில் பலர் தொப்பையை குறைக்க வயிற்று பகுதியில் சில பயிற்சிகளை தொப்பை குறைந்துவிடும் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.


உடற்பயிற்சி வாரத்துக்கு இரண்டு நாட்கள் செய்தால் போதுமா ?


எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.


உடல் எடையை குறைக்க வியர்வை வரும் உடற்பயிற்சிகளை செய்தால் போதுமா ?

வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை தவிர்த்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் நடப்பது நல்ல உடற்பயிற்சியா ?

ஆம், ஏனென்றால் நாம் நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

தசைகளை விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்குமா?

இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி என்றால் என்ன? அப்படி செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

உடற்பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள், இதுவே அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆகும். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாக செய்வது நல்லது.


ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

    ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம், ஏனென்றால் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

    இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் "பத்தே நாட்களில் கட்டுடல் நிச்சயம்" போன்ற வீண் விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் தினசரி தவறாமலும், மிதமாகவும், சரியான முறையிலும் உடற்பயிற்சி செய்து அனைவரும் நலமான வாழ்வு பெற வாழ்த்துகிறோம்.

by Swathi   on 26 Jan 2013  15 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian மூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian
தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஹீலர் ரங்கராஜ் | Superbrain Yoga(Thoppukaranam) benefits தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஹீலர் ரங்கராஜ் | Superbrain Yoga(Thoppukaranam) benefits
கண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்.. கண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்..
அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர் அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர்
நாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர் நாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர்
ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !! ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !!
ஸ்கிப்பிங் பயிற்சியின் ஐந்து நன்மைகள் ! ஸ்கிப்பிங் பயிற்சியின் ஐந்து நன்மைகள் !
கருத்துகள்
12-May-2016 00:26:38 Ganesamoorthy said : Report Abuse
Thoodarnthu skipping seivathinal mattratthai evvalavu natgalil kanalam.
 
24-Feb-2016 03:45:01 R .Thangabaslaran said : Report Abuse
குளிர் காலத்தில் நடை பயிற்சி போகும் பொது சளி பிடிப்பதை எப்படி தவிர்ப்பது ?
 
28-Jan-2016 02:51:03 நிவேத்திதா said : Report Abuse
ஸ்கிப்பிங் செய்வதனால்உங்கள் இடை குறையும் அதனால் ஸ்கிப்பிங் செய்வது நல்லது அனால் உங்களுக்கு blood pressure போன்ற வியாதிகள் இருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பது நல்லது
 
30-Dec-2015 04:30:10 dhurgadevi said : Report Abuse
ச்கிபிங் செய்வது நல்லதா கேட்டத ?
 
05-Nov-2015 01:32:50 S.NARAYANAMOORTHY said : Report Abuse
useful. Thanks
 
16-Sep-2015 04:50:50 ம்.ashok said : Report Abuse
உடல் எடைஐ குறைக்க சித்த மருந்துகள் சாபிட்டால் நல்லதா? இல்லையா. .
 
20-Aug-2015 09:25:22 மணிகண்டன் said : Report Abuse
உடல் ஏடை குறைக்க சைவம் சாப்பிடுவது நல்லதா(or)அசைவம் நல்லதா?
 
20-Aug-2015 09:17:07 மணிகண்டன் said : Report Abuse
நான் இனிமேல் தான் இதை முயற்றி சேய்ய போகிரேன்
 
03-Jul-2015 21:04:47 HrS said : Report Abuse
26 km la gym iruku...so ,தொலைதூர உடற்பயிற்சி நல்லதா or கெட்டதா.(advandage or disadvandage)
 
24-Mar-2015 03:34:41 வ .காமராஜ் said : Report Abuse
இது எனக்கு பயனுள்ளதாக இருந்தது .இன்னும் இது தொடர வேண்டும்
 
08-Jan-2014 09:20:19 vajith ahamed said : Report Abuse
keppai kamba kool and fruits also very nice .dnt eat porata which s not easily digest which take 2days.change u r food habit.
 
17-Dec-2013 00:12:50 சரவணன் said : Report Abuse
பொதுவாக, அசைவ உணவுகளை விட , சைவ உணவுகளான காய்கறிகள், பழங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் மிகவும் நல்லது.
 
11-Dec-2013 10:09:08 uthaya said : Report Abuse
incremant in wait piz
 
28-May-2013 06:12:33 கார்த்திக் said : Report Abuse
வெள்ளைகரு உடலுக்கு மிகவும் நல்லது. புரோட்டின் நிறைந்தது வெள்ளைக்கரு . தினமும் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கு இதை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு அதிக சத்து கொண்டது மேலும் கொழுப்பு நிறைந்தது. குழந்தைகள் தினமும் சாப்பிடலாம். பெரியவர்கள் உடல்நலத்தை பொறுத்து வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.
 
28-May-2013 05:48:15 alagappan said : Report Abuse
முட்டை உடலுக்கு நல்லதா ? தினமும் எனக்கும் என் மனைவிக்கும் வாக்குவாதம் நடக்கிறது . என் பிள்ளைகள் ( வயது 14 & 12 ) இருவருக்கும் முட்டை கொடுக்க சொன்னால் என் மனைவி கூடாது என்கிறார். எங்களுக்கு தெளிவு படுத்தவும் ப்ளீஸ்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.