சமீபத்தில் கோச்சடையான் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்திற்கு யு சான்றிதல் வழங்கியுள்ளனர்.
இதனால் படம் அறிவிக்கப்பட்ட படி ஏப்ரல் 11 ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லையாம். அந்த பணி அடுத்த மாதம் தான் தொடங்கப்போகிறதாம்.
ஏனெனில் கோச்சடையான் படத்தின் கிராஃபிக்ஸ் இறுதிக்கட்ட பணிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடித்து அவுட்புட்டை வாங்கி வருவதற்காக சீனாவுக்குச் சென்றிருக்கிறார் சௌந்தர்யா. சீனாவிலிருந்து அவர் வந்த பிறகே ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
கோச்சடையான் படத்தை பற்றிய தற்போதைய செய்தி என்னவென்றால், மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
|