கோச்சடையான் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினி, கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. இதுவரை இப்படம் தொடர்பாக எந்த ஒரு விளம்பர படங்களும்(ஸ்டில்) வெளியாகவில்லை.
இந்நிலையில் லிங்கா படத்தின் அதிகாரப்பூர்வமான முதல் போஸ்டரை வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட இருக்கின்றனர். லிங்கா போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று காலையிலேயே வெளியாகும், போஸ்டர், மோஷன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
|