LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மகாகவி நாள்

மகாகவி நாள்

அடிமை மனிதர் நடுவில் வீரக்கவிதை முழங்கியவன். பிணமும் உயிர் கொள்ளுமளவு உணர்வுப்பூர்வமான கவிதைகள் இசைத்தவன்.  செப்டம்பர் 11, இந்த வீரக்கவி, தமிழ்க்கவி இன்னுயிரை காலம் பறித்தது இந்நாளில் தான்.

"உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என முழங்கியவன்"
"நானுமோர் கனவோ ஞாலமும் பொய்தானோ" என ஞானம் பேசியவன்.
"பகைவனுக்கருள்வாய்" எனக் கனிவு சொன்னவன்.
13 மொழிகள் அறிந்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று கூவியவன்.
தமிழை உயிராய் போற்றியவன்.

பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11, இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்ததோடு பாரதியாரை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் அவர்கள்.

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11, இனி அரசின் சார்பாக மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும்.
2.பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இந்நாளில் மாநில அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி  இளங்கவிஞர் விருது வழங்கப்பட்டு,ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
3.பாரதியாரின் தொகுக்கப்பட்ட பாடல்கள்,கட்டுரைகள் "மனதில் உறுதி வேண்டும்" என்ற தலைப்பில் புத்தகமாக வழங்கப்படும்.
4.பாரதியைக் குறித்த ஆய்வாளர்களுக்கு விருதுகளும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
5.பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் தொகுக்கப்பட்டு வடிவம் மாறாத செம்பதிப்பாக வெளியாகும். குழந்தைகள் அறியும் வகையில் பாரதியாரின் வாழ்வை விளக்கும் பல சித்திரக் கதை நூல் மற்றும் சிறந்த நூறு கவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியத்தோடு புத்தகம் வெளியாகும். பாரதியின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த ஆய்வு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகும்.
6. பாரதியாரின் நினைவு இல்லம் மற்றும் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகத்தில் 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
7.உலகத் தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பாரதி பற்றிய நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடைபெறும்.
8.பாரதியாரின் திரையிசைப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் இசைக்கச்சேரி 'திரையில் பாரதி' என்ற நிகழ்வு நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் நடைபெறும்.
9.நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சிகள் செய்தித் துறை மூலமாக நடைபெறும்.
10. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
11.காசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டினை பராமரிக்க அரசு சார்பாக நிதியுதவி வழங்கப்படும்.
12.பாரதியாரின் படைப்புகள், குறும்படம் நாடகங்களாக்கப்பட்டு நவீன ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படும்.
13.பாரதியாரின் உணர்வுமிக்க வரிகள் பள்ளிகள் கல்லூரிகள் பேருந்து நிலையங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.
14.ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு 'மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா' எனப் பெயர் சூட்டப்படும்.

போன்ற அறிவிப்புகள் பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

by R.Gnanajothi   on 15 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது
கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள்
தமிழர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தமிழர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
'ஒரு நாகரித்தின் மொழி தமிழ்'~ஆர்.பாலகிருஷ்ணன் 'ஒரு நாகரித்தின் மொழி தமிழ்'~ஆர்.பாலகிருஷ்ணன்
'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தமிழணங்கு ஓவியம் 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தமிழணங்கு ஓவியம்
'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாப்பாத்திரங்களை கொடுங்கள்,'தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து 'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாப்பாத்திரங்களை கொடுங்கள்,'தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து
கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைகள் கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைகள்
பத்ம விருது பெரும் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள்,இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு பத்ம விருது பெரும் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள்,இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.