|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கபிலன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கபிலன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்: மருத்துவர் கபிலன் அவர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவத்துறை 2007ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதன் நோக்கம் சித்த மருத்துவத்தை ஆராய்ச்சி ரீதியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே ஆகும். சித்த மருத்துவக் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் 11 சித்த மருத்துவக் கல்லூரிகளும், கேரளாவில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரியும் என இந்தியாவில் மொத்தம் 12 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. முன்பு சித்த மருத்துவம் படிக்க வேண்டுமானால் தமிழ் மொழி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் சித்த மருத்துவம் படிக்கலாம். ஒதுக்கப்பட்ட சீட்டுகள்: சித்த மருத்துவத்தின் பி.எஸ்.எம்.எஸ். என்ற இளங்கலை படிப்புக்கு ஆண்டுதோறும் 650 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. இதில் 15 சதவீதம் மத்திய அரசுக்கானவை. மீதமுள்ள 85 சதவீதமும் தமிழ்நாடு அரசுக்கானவை. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென 5 சீட்டுகள் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகின்றன. பட்ட மேற்படிப்புகள்: பட்ட மேற்படிப்புகளுக்கும் சித்த மருத்துவத்துறை உறுதுணையாக இருக்கிறது. ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகின்றன. முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு 2 ஆண்டுகள் ஆகும். பி.எஸ்.எம்.எஸ். படித்த மாணவர்கள் மருத்துவத்துறையின் அனைத்து பட்ட மேற்படிப்புகளுக்கும் தகுதியாகின்றனர். இளங்கலை முடித்த பிறகு நேரடியாகவும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பினைப் படிக்கலாம். தனியார் கல்லூரிகளும் அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பகுதிநேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம். மற்ற அனைவரும் முழுநேரமாக மட்டுமே முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். சித்த வர்மம்: வர்மக்கலையை எந்த பிரிவில் அடக்குவது என எல்லோரும் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில், வர்மக்கலையானது சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்தது என்று கூறி ‘சித்தவற்மம்’ என்ற கருத்தரங்கையும் மருத்துவர் கபிலன் அவர்கள் முதன்முறையாக நடத்திக் காட்டினார். சான்றிதழ் பெயர் மாற்றம்: மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட எந்த சான்றிதழ் தொலைந்தாலும் போலி சான்றிதழ் பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் ஒருமுறை கொடுக்கப்பட்டு விட்டால் அதில் பெயர் மாற்றம் செய்ய முடியாது. எனவே மாணவர்கள் தான் சேர்ந்த முதல் வருடத்திலேயே தேர்வுக்கான அனுமதிச் சீட்டு உள்ளிட்ட அனைத்திலும் பெயர் சரியான முறையில் இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். |
||||||||
by Lakshmi G on 17 Nov 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|