LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

மல்லாடிஹள்ளிக்கு கிடைத்த அருள் வாக்கு!

வாழ்க்கையில் சில தருணங்களில் துன்பம் வரும். இது நாம் அனைவருமே அறிந்தது தான். ஆனால் வாழ்க்கையின் துவக்கமே துன்பமும் துயரமும் நிறைந்ததாக இருந்தால், நம் மனம் நமக்கு அப்பாற்பட்ட சக்திக்காக ஏங்கும். மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த துன்பங்கள் என்ன, அதிசயங்கள் என்ன என்பது இந்த வாரப் பதிவில்!
1891ம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஒரு கேரளக் கிராமத்தில் அனந்த பத்மநாபன் என்னும் புகழ்பெற்ற ஜோதிடருக்கும், பத்மாம்பாள் என்னும் பெண்மணிக்கும் மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் மகனாகப் பிறந்தார். குமாரசாமி என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்ததிலிருந்தே நோஞ்சான் குழந்தையாகத்தான் இருந்தான். பல ஆண்டுகள் அவனுக்கு சுய உணர்வுகூட திரும்பவில்லை. எனவே, அவன் பெற்றோர் கர்நாடகாவில் கொல்லூரில் உள்ள அவர்களின் குல தெய்வமான மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு அவனை எடுத்துச் செல்லத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
கொல்லூர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து சில நூறு கி.மீ தூரத்தில்தான் உள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் இப்போது போல போக்குவரத்து வசதிகள் கிடையாது. மேலும் வழியெங்கும் அடர்ந்த காடுகள். நோய்வாய்ப்பட்ட மனைவி, சுய உணர்வற்ற குழந்தை இவர்களுடன் மிகவும் மெதுவாகவே பயணப்பட முடிந்ததால், வழியிலேயே உடுப்பி அருகில் உள்ள பர்கூர் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கிச் செல்ல குமாரசாமியின் தந்தை தீர்மானித்தார்.
அருள்வாக்கு செய்த அற்புதம்!
ஆனால், அந்தச் சில நாட்கள் பல மாதங்கள் ஆகின. மாதங்கள், வருடங்கள் ஆகின. அவர்களால் அந்தப் பயணத்தை கடைசி வரை பூர்த்தி செய்யவே முடியவில்லை. குமாரசாமியின் உடல் தொடர்ந்து மிக மோசமாகவே இருந்தது. ஒரு முறை மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா மடத்தின் மடாதிபதி, அவர்கள் தங்கியிருந்த கிராமத்தில் முகாமிட்டார். இதை அறிந்த குமாரசாமியின் அன்னை, அவரிடம் குழந்தையை எடுத்துச் சென்று ஆசி பெறத் தீர்மானித்தார்.
காலையிலேயே அவனை எடுத்துக் கொண்டு அவர் தங்கியிருந்த இடத்துக்குப் போய்விட்டாலும், மடத்திலிருந்த ஸ்வாமிகள், குமாரசாமியின் அன்னையைக் காத்திருக்கச் சொல்லி சைகை காட்டிவிட்டு, மற்றவர்களை எல்லாம் பார்த்து அனுப்பிக்கொண்டு இருந்தார். அனைவரையும் அனுப்பிவிட்டு இறுதியில் மாலை நேரத்தில் குமாரசாமியின் அன்னையிடம் வந்து, “உன் பையன் வெகு காலம் வாழ்வான். அவன் மிகவும் புகழுடன் விளங்குவான். தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பெரிய பெரிய உதவிகள் செய்வான். எனவே, அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று சொன்னார்.
அந்த அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் நடக்கக்கூட சக்தி இல்லாமல் இருக்கிறான். ஆனால், ஸ்வாமி ஏதேதோ சொல்கிறாரே, ஒரு வேளை அவர் நம் பையனைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என நினைத்து, அவனுக்கு நல்ல உடல்நலம் தரச் சொல்லி இன்னமும் அழுத்தமாக வேண்டினார். அந்த ஸ்வாமிகள், பையனின் தலையில் கை வைத்து, “இவனுடைய உடல்நலம் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
மிகவும் அதிசயமாக அடுத்த நாளில் இருந்தே குமாரசாமியின் உடல் தேறத் தொடங்கியது. சிறிது நாட்களிலேயே அவன் தானே சாப்பிடவும், எழுந்து நடக்கவும் ஆரம்பித்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த குமாரசாமியின் பெற்றோர், அவன் பெயரை, ராகவேந்திரா மடத்து ஸ்வாமியின் நினைவாக ‘ராகவேந்திரா’ என மாற்றினர்.
கடவுளைத் தேட வைத்த ஆன்மீக தீட்சை
இந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நிலைக்கவில்லை. ராகவேந்திரன் நன்றாக நடப்பதைப் பார்ப்பதற்குள் அவனுடைய தாயார் உடல்நிலை மோசமடைந்து இறந்துவிட்டார். மிகவும் மனம் வருத்தமடைந்த ராகவேந்திரனின் தந்தை, ஓரளவு மட்டுமே தேறியிருந்த ராகவேந்திரனைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியாமல் தன் அண்டை வீட்டாரை அழைத்து, அவனைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டினார்.
ஊர் பெரியவர்கள் தலையீட்டால், அவனைத் தத்தெடுத்துக் கொள்ள வேறு ஒரு குடும்பம் முன்வந்தது. அந்தக் குடும்பத்துக்குத் தன் பணம், சொத்து முதலிய அனைத்தையும் கொடுத்துவிட்டு, ராகவேந்திரனின் தந்தை காசிக்கு தீர்த்த யாத்திரை புறப்பட்டுவிட்டார். அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை.
பிறகு வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட ராகவேந்திரன், சிறிது சிறிதாக உடல்நிலை தேறி அருகில் உள்ள பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். பள்ளிப் படிப்பைவிட மற்ற செயல்களிலேயே அதிக ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது, தன் வீட்டில் ஒரு ஸ்வாமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.
ஸ்வாமி நித்யானந்தா என்று அழைக்கப்பட்ட அவர், ஒரு நாளைக்கு மேல் எங்கும் தங்குவதில்லை. ஆனால், அவர் ராகவேந்திரன் வீட்டில் ஒரு வாரம் தங்கத் தீர்மானித்தார். கிளம்ப வேண்டிய நாளில், பள்ளிக்கு புறப்பட இருந்த ராகவேந்திரனை அழைத்து குளித்து வரச் செய்து, அந்த வீட்டில் ஒரு அறையைத் தயார் செய்யச் சொல்லி அவனுக்கு அங்கு தீட்சை கொடுத்தார். தான் அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கியதே அவனுக்கு தீட்சை கொடுப்பதற்காகத்தான் என்றார்.
சுமார் ஓரிரு மணிகள் நீடித்த அந்தத் தீட்சையின்போது, ஸ்வாமி நித்யானந்தா இளம் ராகவேந்திரனின் தலையில் கை வைத்து சக்திப் பரிமாற்றம் செய்து அவனை பரவச நிலையில் ஆழ்த்தினார்.
அன்றே ஸ்வாமி நித்யானந்தா விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இளம் ராகவேந்திரனின் மனதில் கடவுளைப் பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. நாளாக ஆக அந்த ஆசை அதிகமானதே தவிர, சிறிதும் குறையவே இல்லை. 10ம் வகுப்பு தேர்வுகள் முடித்த கையோடு, கடவுளைத் தேடி வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.