கீழடி 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கீழடி இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வின் அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் உள்ளது.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை 9 மாதங்களுக்குள் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
|