சமீபத்தில் சினிமா நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து கேம் சேஞ்சர் என்டர்டெயிண்மென்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனம், முதன் முதலாக டோனாவூர் ராதா என்ற படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய லட்சுமிராமு என்பவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக சிநேகாவும், பிரசன்னாவும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு பிறகு கேம் சேஞ்சர் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் அடுத்ததாக 'அச்சமுண்டு அச்சமுண்டு’ பட இயக்குனர் அருண்வைதியநாதன் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்கள்.
|