|
||||||||
ஒரு பிரசவ கதை ! |
||||||||
![]()
ஒரு பிரசவ கதை !
வேட்டைக்கு சென்ற அரசன் பொழுது போனதால் ஆலமரத்தில் படுத்து தூங்கி விட்டான். மறுநாள் விடிந்த போது விழித்தான்.
மரத்தடி நோக்கி ஒரு நிறைமாத பெண் விறகு சுள்ளிகள் பொருக்கிய படி வருகிறாள். மர நிழலில் அமர்ந்த அவள்,
சிறிது நேரத்தில் அலறல் வலியோடு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அருகில் இருந்த பனங்குட்டி கறுக்கால் தொப்புள்கொடியை அறுத்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு செல்கிறாள்.
இவற்றை மரத்தில் இருந்த பார்த்த அரசன் தனது மந்திரியிடம் இந்த நிகழ்வை கூறி ஏன் நமது மகாராணிக்கு இவ்வளவு வைத்தியர்கள் மருந்துகள்
மிகவும் எளிதாக அந்த பெண் குழந்தை பெற்றாளே என்கிறார்.
அதற்கு மந்திரி பதில் கூற அவகாசம் கேட்டு செல்கிறார்.
மந்திரி அரண்மனை தோட்டத்தில் உள்ள மலர் செடிகளுக்கு இரண்டு நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டாம் என வேலைகாரர்களிடம் கூற தோட்ட மலர்செடிகள் வாடி விட்டன.
அரசன் மலர் செடிகள் வாடியதை மந்திரியிடம் கேட்கிறார்.
மந்திரி காட்டில் உள்ள மலர் செடிகள் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது வதங்காது அதன் தகவமைப்பு அப்படி.,
நம் அரண்மனை மலர்செடி தினமும் தண்ணிர் விட்டால் தான் மலரோடு வதங்காமல் இருக்கும், இல்லையேல் இறந்து விடும்.
அதே போல் தான் மன்னா காட்டில் நீங்கள் பார்த்த பெண் நல்ல உழைப்பாளி அவள் குழந்தையை பெற்றெடுப்பது எளிது. நம் மகாராணி அப்படியல்ல ஆதலால் தான் இவ்வளவு மருத்துவர்கள் மருந்துகள் என்றார்.
நன்றி: Manju Manjunathan
____________________ பிள்ளையாண்டாள் வயிற்றில் தலைதிரும்பாக் குழவியை இரு பெண்கள் மெல்லத் தட்டித்தடவி உருட்டித் திருப்புகின்றனர். மற்றொருத்தி அடுத்து என்ன செய்யலாமென்று சிந்தித்து வழி தேடுகிறாள். பிறிதொருத்தியோ உடன் தரவேண்டிய மூலிகை மருந்தினை அரைத்துக் கொண்டிருக்கிறாள்.
இவர்கள்தான் எம் பெண்டிருக்கு அன்று மருத்துவம் பார்த்த மருத்துவச்சியர்! மற்றபடி, வாள்கொண்டு அறுத்துப் பிதுக்கிக் குழவியை எடுக்கவென்று எவரும் அங்கே இருப்பதாய்க் காணோம்! இடம்: தாராசுரம் |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 05 Aug 2018 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|