'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்'பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தமிழணங்கு ஓவியம்
இந்தியை அலுவல் மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.பிற மாநிலங்களின் மக்கள் இந்தியை தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும்' போன்ற கருத்துக்களை அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் அமித்ஷா (உள்துறை அமைச்சர்) கூறி இருந்ததையடுத்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 'ழ'என்ற செங்கோலுடன் நடனமாடும் தமிழன்னை ஓவியத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அவ்வோவியத்தில் 'தமிழணங்கு'என்றும், 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற பாரதிதாசன் வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
|