LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

ரெய்கி செய்தால் என்னாகும்?

ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்றவை மூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்வதனால், செய்பவருக்கும் அதில் ஈடுபடுத்தப்படுபவருக்கும் என்ன நடக்கிறது. இதனால் ஏதாவது பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமா?
சத்குரு:
நம் உடல்நலம் எப்போதும் காரணம் மற்றும் விளைவு பொறுத்தே இருக்கிறது. இப்போது உங்களுக்கு தொற்றுநோய் வந்தது என வைத்துக்கொள்ளுங்கள். தொற்றுநோய்க்கான காரணம் ஒரு கிருமி. இது வெளிப்புறக் காரணம். இப்போது நீங்கள் கிருமிநாசினி மருந்தை உட்கொண்டு கிருமியை அதாவது அந்த வெளிப்புறக் காரணத்தை அழிக்கிறீர்கள்.
ஆனால், மற்ற நோய்கள் வெளிக் காரணங்களால் ஏற்படுவதில்லை. அந்த நோய்களுக்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை, சக்தி நிலை தொடர்பானவை. நீங்களே உண்டாக்கிய கர்மவினை சக்தி நிலையில் பாதிப்பை உண்டாக்கும்போது சக்திநிலையின் சமநிலை மாறுகிறது அல்லது தவறாக இயங்குகிறது. அப்போது அது உடல் அல்லது மனத்தில் நோயாக வெளிப்படுகிறது.
ரெய்கி மற்றும் பிரானிக் ஹீலிங் போன்ற சக்தி நிலையிலான சிகிச்சை முறைகளில் நீங்கள் விளைவை மட்டும் சரி செய்கிறீர்கள். ஆனால், காரணம் அப்படியே இருக்கிறது. உங்கள் சக்திநிலையின் மேல் உங்களுக்குள்ள சிறிய கட்டுப்பாட்டால் காரணத்துக்கும் விளைவுக்கும் இடையில் ஒரு திரை போட்டு விடுகிறீர்கள். எனவே விளைவு போய்விடுகிறது. ஆனால், நோய்க்கான காரணம் போகவில்லை.
இப்போது உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சக்திநிலை மிகவும் பாதிப்பில் இருக்கிறது என்பதைக் குறிக்கவே உங்களுக்கு இந்த ஆஸ்துமா வந்தது. பிரானிக் ஹீலிங் மூலம் இப்போது ஆஸ்துமாவை குணப்படுத்திவிடுகிறோம். இப்போது விளைவு போய்விட்டது, ஆனால், காரணம் அப்படியே இருக்கிறது. எனவே, விளைவு இப்போது இன்னும் ஆழமாக வேறு ஒரு வடிவம் எடுத்து உங்கள் நிலையை உங்களுக்குத் தெரிவிக்கும். எனவே, இப்போது அடுத்த வினாடி உங்களுக்கு வேறு ஏது வேண்டுமானாலும் நேரலாம். வேறு நோய்தான் வர வேண்டும் என்பதில்லை. நீங்கள் விபத்தில்கூட சிக்க நேரிடலாம்.
சக்திநிலையில் ஒருவரைக் குணப்படுத்துவது என்பது ஒரு நிலையில் கடவுளுடன் விளையாட முயற்சிப்பதாகும். தவறான வழியில் சக்தி நிலையைக் கையாள்வதாகும். இந்த சிகிச்சை முறையில் சிகிச்சை கொடுப்பவர் மற்றும் சிகிச்சை பெறுபவர் இருவருமே பாதிக்கப்படுகின்றனர்.
நோயின் மூலத்தையே, முழுக் காரணத்தையே அடுத்தவரிடம் இருந்து உங்களுக்குள் வாங்கிக்கொள்ள முடியாவிட்டால், சிகிச்சை பெறுபவர்க்கு உண்மையான குணம் என்பது நடக்காது. அப்படி நோயின் காரணத்தையே அடுத்தவரிடம் இருந்து உங்களால் பெற முடிந்தாலும், அது உங்கள் சக்திநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சக்திநிலையைக் கையாள்வதில் நிபுணத்துவம் இல்லாமல் இதுபோன்ற சிகிச்சையில் இறங்கக்கூடாது.
தியானலிங்கம் பிரதிஷ்டைக்காக நான் சிலமுறை நோய்க்கான காரணங்களையே அடுத்தவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறேன். அப்படி நான் வாங்கியபோது, காரணம் மற்றும் விளைவு என்ற இரு வகையிலும் அவர்களுக்கு நோய் நீங்கிவிட்டது. அவர்கள் தங்கள் உடலை உபயோகித்து அந்த நோயை ஓரளவு விரட்ட 10 வருடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால், நான் 10 நாட்களிலேயே அதை முழுவதும் நீக்க முடிந்தது. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்துக்காக மட்டுமே நாம் இப்படிச் செய்கிறோம். தொழில்ரீதியாகச் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை.
உங்கள் நோயின் மீது நீங்கள் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்தாலே, நீங்கள் நோயின் காரணத்துடன் தொடர்புகொள்கிறீர்கள். உடலின் ஒரு பாகத்தின் மீது நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும் விநாடியிலேயே உங்கள் சக்திநிலை தீவிரமாகி பல விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இப்படி சக்திநிலை மூலம் ஓரளவு சரி செய்தாலும், காரணமான கர்மவினை முற்றிலும் அகலுவதில்லை.
எல்லாவிதச் சிகிச்சையாளர்களும் இப்போது உலகில் பெருகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சக்தி நிலையிலான சிகிச்சை மேளாக்கள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே, மக்களை குணப்படுத்தும் ஆர்வம் சிகிச்சையாளருக்கு இருந்தால், பிரபஞ்சத்தின் சக்தி அவர் கைகளில் இருந்தால், அவர் ஏன் மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள நோயாளிகளைக் குணப்படுத்தக் கூடாது?
எனவே, மிகவும் சரியான வழி – யோகக் கிரியைகளைச் செய்வதே. இப்படிச் செய்யும்போது இயற்கையாகவே முழுமையாகக் குணம் அடைகிறீர்கள். யோகக் கிரியைகள் கர்மாவையே கரைத்துவிடுகின்றன. எனவே, காரணம் போய்விடுகிறது. காரணமே காணாமல் போகும்போது விளைவும் அதாவது நோயும் காணாமல் போகும். உண்மையில் எளிய சில யோகக் கிரியைகளை 3 அல்லது 4 வாரங்கள் செய்து வந்தாலே, ஆயுளுக்கும் இருக்கும் என்று நீங்கள் கருதியிருந்த நோய்கள்கூட அகன்றுவிடுகின்றன. இது ஏதோ அதிசயம் என்பதல்ல. அறிவைப் பயன்படுத்துவது. அவ்வளவுதான்!

by Swathi   on 29 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.