LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!

கிரிக்கெட் உலகில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர்க்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கான விழா டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று வண்ணமயமாக நடந்தது. அரங்கில் இருந்தவர்கள் உற்சாக கரகோஷம் எழுப்ப, விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், சச்சின் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருதை’ ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், சச்சின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில், பாரத ரத்னா விருது பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, பாரத ரத்னா’ விருதை எனக்கு கிடைத்த மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். ஏற்கனவே கூறியது போல, இவ்விருதை என் தாயாருக்கு மட்டுமல்லாமல், தங்களது குழந்தைகளின் கனவு நனவாக நிறைய தியாகங்களை செய்த இந்தியாவில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

அழகான இந்திய நாட்டில் பிறந்ததற்கு, பெருமை அடைகிறேன். நீண்ட காலமாக என் மீது அன்பு செலுத்தி, ஆதரவு அளித்து வருபவர்களுக்கு நன்றி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்திய மக்களின் மனங்களில் புன்னகை பூக்கச் செய்ய என்னால் முடிந்த அளவுக்கு தொடர்ந்து முயற்சி செய்வேன். ‘பாரத ரத்னா’ விருது பெற்ற அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவிற்கு எனது வாழ்த்துகள் என சச்சின் கூறினார்.

 

இந்த விருதை பெற்றதன் மூலம், மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதை தட்டிச் சென்றவர் என்ற பெருமை சச்சின் பெற்றுள்ளார். இது தவிர, இவ்விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

by Swathi   on 04 Feb 2014  0 Comments
Tags: Bharat Ratna Award   Sachin Tendulkar   Bharat Ratna Award Sachin   Indian Mothers   பாரத ரத்னா   பாரத ரத்னா விருது   இந்திய அன்னை  
 தொடர்புடையவை-Related Articles
சினிமாவில் ஹீரோவாகிறார் சச்சின் !! சினிமாவில் ஹீரோவாகிறார் சச்சின் !!
பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !! பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.