|
||||||||
சனி மகா பிரதோஷம் |
||||||||
சனி மகா பிரதோஷம்
ஜோதிடர் பலராமன்
சாகா வரம் கிடைக்க அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தை அதன் வீரியத்தை தாங்க முடியாத தேவர்களும் அசுரர்களும் சிவனை வேண்டியபோது அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்த நேரம் பிரதோஷ நேரம். நீல நிற விஷத்தை உண்டு கழுத்து கண்டத்தில் நிறுத்தியதால் "திருநீலகண்டன்" என்று அழைக்கப் படுகிறார் சிவபெருமான். சிவனை வணங்கும் பக்தர்களுக்கு இது மிகப் புனிதமான நேரமாகப் போற்றி புகழப்படுகிறது.
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதி (இது அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பிறகு வரும் 13-ஆம் நாள் ஆகும். சமஸ்கிருதத்தில் திரயோதசி என்பதற்கு 13 என்று பொருளாகும்) வரும் நாளில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் பின்பும் உள்ள நேரம் ஆகும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஆக பிரதோஷ நேரம் 4 நாழிகைகள் என்பது 96 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரமாகும். பிரதோஷம் வாரத்தின் எந்த நாளிலும் வரும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 2-ஆம் தேதியும் 16 - ஆம் தேதியும் இவை இரண்டு நாட்களுமே சனிக்கிழமையில் வருவதால் சனிப்பிரதோஷ நாட்கள் ஆகும்.
இந்த நேரத்தில் சிவன் கோவிலில் பார்வதி சமேத பரமேஸ்வர தரிசனம் மிகச் சிறந்த புண்ணிய பலனைத் தர வல்லது. பிரதோஷ பூஜையில் பங்கு பெறுவது, பூஜைக்குப் பொருட்கள் அளிப்பது, பிரதோஷ பூஜை செய்வது, சிவபுராணம் படிப்பது ஆகிய தெய்வீக ஈடுபாடுகள் மூவுலகுக்கும் இறைவனான எம்பெருமான் சிவபெருமானின் பூரணமான அருளைப் பெற்றுத்தரும். இந்த பிரதோஷ நாட்களில் வலம் வரும்போது முதலில் கொடி மரம் அருகே நின்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்து சிவலிங்க தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை வலம் வந்து அவரைத் தரிசனம் செய்து விட்டு அப்பிரதட்சிணமாக திரும்பி வந்து சண்டிகேஸ்வர சந்நிதிக்கு முன் உள்ள அபிஷேகத் தீர்த்தம் வரும் கோமுகத்தை தாண்டாமல் அப்படியே திரும்பி வந்த வழியே வந்து நந்தி தேவரின் பின் நின்று சிவலிங்க தரிசனம் செய்யவேண்டும். இவ்வாறு பிரதோஷ நேரத்தில் மூன்று முறை வலம் வருவது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களைப் போக்கும். நம் வாழ்வில் வறுமை நீங்கி வளம் பெருகும்.
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
மாணிக்க வாசகரின் திருவாசகம்
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறிவிச்சையும்
நமச்சிவாயவே நானவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம்
சனி மகா பிரதோஷம்
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! மாணிக்க வாசகரின் திருவாசகம்
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறிவிச்சையும் நமச்சிவாயவே நானவின்றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம்
|
||||||||
by Swathi on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|