|
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி–2 -உலகின் முதல் அறிவியலாளர்கள் சித்தர்கள் |
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 2 உலகின் முதல் அறிவியலாளர்கள் சித்தர்கள் மூவகை அறிவு: அறிவு சார்ந்த இயல் அறிவியல். எதையும் அறிவுக் கண்ணோடு நோக்க வேண்டும். அந்த அறிவை பகுத்தறிவு, படிப்பறிவு, பட்டறிவு என்று மூன்று வகைப்படுத்துவார்கள். கல்விச்சாலைகளிலிருந்து கற்றுக்கொள்கிற பாடங்கள் படிப்பறிவு; வாழ்க்கையில் பெறப்படுகிற அனுபவத்தின் வழி கற்றுக்கொள்கிற அறிவு பட்டறிவு; படிப்பறிவையும், பட்டறிவையும் கொண்டு, சிந்தனையைச் செம்மைப்படுத்தி எது நல்லது, எது கெட்டது, எது சிறந்தது, எது தாழ்ந்தது என்று பகுத்து அறிகிற அறிவு பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு சித்தர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறது. இதனால்தான் சித்தர்கள் உலகின் முதல் அறிவியல் சிந்தனையாளர்கள் எனப்படுகிறார்கள். அறிவு குறித்து திருமூலர்: “அறிவு அறிவு என்றுஅங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகிய வாறே” இந்த உலகத்திலே வாழ்கிற மக்கள் எல்லாம் அறிவு, அறிவு என்று அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். அறிவால் அறியப்படாமல் இருக்கும் அந்த அறிவை யாரும் அறிகிலார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற ஐம்பூதங்களோடு கொள்கிற தொடர்பினால் பார்த்தல், நுகர்தல், கேட்டல், ஸ்பரிசித்தல், சுவைத்தல் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த ஐம்புலன்களினால் ஏற்படுகின்ற பதிவுகள் தான் அறிவு. அறிவால் அறியப்படாமல் இருக்கின்ற ஒரு அறிவு இருக்கின்றது. இந்த உலகை எல்லாம் இயக்கிக் கொண்டிருக்கிற எல்லா அறிவுக்கும் அடித்தளமாக இருக்கிறது ஒரு அறிவு. அந்த அறிவுதான் மெய்யறிவு. அந்த மெய்யறிவை யாரும் அறிவது இல்லை. அறிவு என்பது அற்றுப்போனால், அறிவு என்பது நீங்கிப்போனால், அறிவற்ற நிலைக்கு நீர் போகிற போது உனக்குள்ளே மலர்கிற அறிவு தான் பிரபஞ்ச அறிவு. அந்த அறிவற்ற அனுபவத்தில் இருக்கின்ற அறிவில் கிடைக்கின்ற அனுபவம் இருக்கிறதே அதுதான் அழகானது; ஆனந்தமானது என்று கடந்து போகிற அறிவை பற்றிக் கூறுகிறார் திருமூலர். அறிவியலாளர்களான சித்தர்கள்: அறிவு என்பது புதிதாகத் தோன்றிய விஷயமல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் காலத்திலேயே நன்கு பகுத்து ஆராயப்பட்டு உணரப்பட்டது என்று கூறலாம். ஆக ‘அறிவியலாளர்கள்’ என்பது சித்தர்களுக்குப் பொருந்தும். ஏனென்றால் அறிவியல் என்பது வெறும் பகுத்தறிவோடு மட்டும் நின்று விடவில்லை. அதைத் தாண்டி இருக்கிறது. இன்றைய பகுத்தறிவு உலகம் பகுத்து அறிந்திருக்கிற முப்பரிமாண அறிவு இருக்கிறதே அந்த முப்பரிமாண அறிவுகளையெல்லாம் சித்தர்கள் எப்படி அறிந்தார்கள் என்பதை அறிந்தால், இவற்றையெல்லாம் கடந்த ஓர் அறிவு அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது நமக்கு விளங்கும். அறிவு, அறியாமை ஆகியவற்றை அறிந்து அந்த அறிவினாலே தான் அறிந்திருக்கிற விஷயங்களையெல்லாம் அற்புதமான பாடல்களாகப் படைத்திருக்கிறார்கள் சித்தர்கள். மேலோட்டமாக ஒரு பாடலை பார்த்தால் அந்தப் பாடலின் பொருள் நமக்குச் சாதாரணமாக இருக்கும்; நன்கு ஆராய்ந்து பார்த்தால் அந்தப் பாடலின் கருத்து மிக ஆழமானதாக இருக்கும். மரபியலின் தந்தை திருவள்ளுவர்: சித்தர்கள் சமூகநீதிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் எனலாம். ஐhதி, மத, வண்ண பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் அனைவரையும் சிவனின் அம்சமாகக் கருதி, மதித்து ஐPவன் உய்தி சித்தமாவதற்கு வழிகண்டவர்கள். ஐhதி, மதங்கள் இல்லை என்று கூற வருவதற்கு ஒரு மரபியலைத் திருவள்ளுவர் ‘ஞான வெட்டியான்’ என்னும் நூலில் முன்வைக்கிறார். “இஞ்சியிட மஞ்சளுண்டோ, ஏலமிட சுக்காமே h நஞ்சுகந்த எட்டியிலும், நல்ல எலுமிச்சையுண்டோ துஞ்சுபுகழ் பூசை செய்யும் சுந்தரரே எம்குலத்து வஞ்சியை நீ சேர்ந்தகாள் மைந்தன் பிறவாதோ?” கேள்வி கேட்டு பதில் கூற வைக்கிற மரபு சித்தர்கள் மரபு. மேற்கண்ட பாடலில் ஐhதி, மத பேதங்கள் இல்லை எனக் கூற வருவதற்கு ஒரு மரபியலை முன்வைக்கிறார்கள் சித்தர்கள். படிக்காத பாமரரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான சொற்களில் இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமான இப்பாடலைப் பார்த்தால் வெறும் இஞ்சி, மஞ்சள், ஏலம், எலுமிச்சை என்றேத் தோன்றும். நன்கு ஆராய்ந்து பார்த்தால் அற்புதமான மரபியல் நுணுக்கங்கள் புலப்படும். இஞ்சியும் மஞ்சளும் வேரில் கிடைக்கிற மகசூல்கள்; இரண்டும் கிழங்கு வகைகள்; தூரத்தில் வைத்துப் பார்த்தால் இரண்டும் ஒன்று போலத் தோன்றும். இஞ்சியோடு சேர்த்து மஞ்சளைப் பயிர் செய்தாலும், மஞ்சளோடு சேர்த்து இஞ்சியைப் பயிர் செய்தாலும், இஞ்சி செடியின் கீழ் இஞ்சி தான் காய்க்கும்; மஞ்சள் செடியின் கீழ் மஞ்சள் தான் காய்க்கும். இஞ்சியைப் பயிர் செய்தால் மஞ்சள் வராது; மஞ்சளைப் பயிர் செய்தால் இஞ்சி வராது. ஏனென்றால் இஞ்சி வேறு இனம்; மஞ்சள் வேறு இனம். அதே போல் பார்ப்பதற்குக் காய்கள் ஒன்று போலத் தோன்றினாலும் எட்டி வேறு இனம்; எலுமிச்சை வேறு இனம். வேறு வேறு இனங்கள் கலப்பது இல்லை. ஏனென்றால் இவை தனித்த இனங்கள். உன்னை நீ பெரிய புகழுக்குரியவன், உயர்ந்த சாதியினன் என்று சொல்லிக்கொண்டு, ஆலயத்தில் பூiஐ பரிகாரங்களை மட்டும் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாயே, நீ உண்மையிலேயே ஒரு தனி இனம், உயர் இனம், உயர்ந்த சாதிக்காரனாக இருந்தால், எம் குலத்து(தாழ்ந்த இனம்) பெண்ணோடு நீ சேர்ந்தால் குழந்தை பிறக்குமா? பிறக்காதா?..... குழந்தை பிறக்கும் என்றால் நீயும், நானும் வேறு வேறு இனம் கிடையாது. தாவரங்களில் இனங்களை தனித்தனியே தீர்மானிக்கக்கூடிய காரணிகள் அந்த இனத்திற்குள்ளேயே இருக்கிறது. அந்த இன உயிர்களுக்குள்ளே ஒரு காரணி பதிந்திருக்கிறது. மனிதர்களில் அவை இல்லை. எனவே மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்கிறார் திருவள்ளுவர். மனிதர் அனைவரும் சமம் என்று கூற வருவதற்கு தாவரவியலின் மரபியலைக் கையாண்டுள்ளார் திருவள்ளுவர். ஆக ‘மரபியலின் தந்தை திருவள்ளுவர்’ என்று கூறலாம். “பறைச்சியாவது ஏதடா? பனத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே!” பரத்தி என்று ஒருவளை தாழ்த்தி பேசுகின்றாய், பார்ப்பனத்தி என்று ஒருவளை உயர்த்திப் பேசுகின்றாய். பரத்தி தாழ்ந்தவள்; பார்ப்பனத்தி உயர்ந்தவள்; பரத்தி தாழ்ந்த இனம்; பார்ப்பனத்தி உயர்ந்த இனம் என்று கூறுகிறாய். இவை உண்மையானால் ஒளியில்லாத இருளில் பரத்தியையும், பார்ப்பனத்தியையும் ஒருவன் சேரும் போது உண்டாகின்ற சுகத்தை வைத்து ‘இவள் பரத்தி; இவள் பார்ப்பனத்தி’ என்று சொல்ல முடியுமா? என்று சிவவாக்கியர் கேட்கிறார். ஆகச் சாதி, மதம் போன்ற பேதங்கள் மனிதர்களிடத்தில் இல்லை என்று சமூகக் களைகளை அகற்றி எறிந்தவர்கள் சித்தர்கள் எனலாம். உடல் இயக்கவியலில் சித்தர்கள்: இன்றைய அறிவியல் உடல் உறுப்புகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. தானாக இயங்கக்கூடிய தசைகளை இயங்கு தசை என்றும், நம்முடைய செயல்பாட்டிற்குக் கட்டுப்படக்கூடிய தசைகளை இயக்கு தசைகள் என்றும் அவை விளக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு இயங்கு மண்டலமும், ஒரு இயக்கு மண்டலமும் நேரடியாகத் தொடர்பு கொண்டவை. அவையாவன சுவாச மண்டலமும், இரத்த ஓட்ட மண்டலமும் ஆகும். அதாவது, இருதயமானது உடல் முழுவதும் சேகரிக்கப்பட்ட அசுத்த இரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல் அதைச் சுத்திகரித்து நுரையீரல் சிறைகள் மூலமாக மீண்டும் இருதயத்திற்கு அனுப்புகிறது. சித்தர்களுக்கு இந்த அறிவியல் ஞானம் இருந்திருக்கிறது. நுரையீரலின் இயக்கத்தின் வழி இருதயத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று அறிந்திருக்கின்றனர். நுரையீரலைப் பயன்படுத்தி இருதயத்தை இயக்கக் கற்றுக்கொண்டால் 50, 60 ஆண்டுகள் வாழக்கூடிய இருதயத்தை 80, 100 ஆண்டுகள் வாழவைக்கலாம் எனச் சித்தர்கள் அறிந்திருக்கின்றனர். சிவவாக்கியர், “சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரண்டையும் தவிர்த்து தாரையூத வல்லரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழலாகுமே” என்கிறார். அதாவது, காற்றினால் ஒலியெழுப்பக் கூடிய கருவி சங்கு. இது நுரையீரலைக் குறிக்கிறது. தாரை என்பது இருதயத்தைக் குறிக்கிறது. இயற்கையாக வரும் இறப்பிற்கு முன் மனிதர்கள் தங்கள் தவறான வாழ்வியல் முறைகளால், இயற்கை கொடுத்திருக்கிற முழு ஆயுளையும் வாழாமல் வீழ்த்திக் கொள்கிறார்கள். இவ்வாறு நிகழ்கிற துர்மரணங்கள் மாளுதல் (மாண்டு போதல்) எனப்படும். சரியான உயிர்வளி ஓங்கு வாசி பயிற்சியினாலே நுரையீரலின் இயக்கத்தை நெறிப்படுத்தி அதனால் இருதயத்தின் இயக்கத்தைக் குறைத்து வாழ முடியுமானால் உன்னால் நீண்ட ஆண்டுகள் வாழ முடியும் என்கிறார் சிவவாக்கியர். அப்படி வாழ்ந்தவர் தான் திருமூலர்; 3000 ஆண்டுகள் வாழ்ந்தார்; ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்கள் பாடினார் என்று ஆன்மீக உலகம் பதிவு செய்திருக்கிறது. இவையனைத்தும் சித்தர் இலக்கியங்களில் புதைந்து கிடக்கிற ரகசியங்கள். எனவே உலகின் முதல் அறிவியலாளர்கள் ‘சித்தர்கள்’ என்று கூறுவதில்; வியப்பில்லை. மருந்தியலில் சித்தர்கள்: “மேதிகன மத்திச்சுர மேக கூடிய சீத பேதியதி சாரம் பித்திருமலாகிய நோய் தன தனிக்கும் போகக்கு மனந்தளிக்கும் நித்தமுறை விந்துவையுண்டாக்கும் மனமேயறி” நீரிழிவாளர்களுக்கு பல்வேறு மருந்துகளைக் கொடுக்கின்றோம்.;. முளைகட்டிய வெந்தயத்தை உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும் என்கிறார்கள் சித்தர்கள் முளைகட்டிய வெந்தயமானது இரத்தத்தில் உள்ள குளுக்கோசை கட்டுப்படுத்துகிறது என்பதை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமில்லாமல், வெந்தயமானது விந்து சுரப்பதற்குரிய ஆற்றலை அதிகப்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்கள். அனைத்தையும் அறிவியல் வியாக்கியானத்தில் கூறாமல் ஆன்மீக பொக்கிஷங்களாகச் சித்தர்கள் சொல்லிச் சென்றார்கள். “அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாரோடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே” எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவை மனைவி சமைத்துவிட்டு, ஆசையோடு கணவனைக் கூப்பிடுகிறாள்; கணவனும் அதை நன்கு சாப்பிட்டுவிட்டு மனைவியோடு உறவு கொள்கிறான்; அதன் பிறகு அவனுக்கு உடலில் வலி ஏற்பட்டு இறந்து போகிறான் என்று இப்பாடல் கூறுகிறது. அதாவது, உணவு உண்ட உடனே உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இன்று அறிவியல் கூறுவதை அன்றைக்கே சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். ஈர்ப்பியலில் சித்தர்கள்: ஐன்ஸ்டீனைக் கடந்து சிந்தித்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். “இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே” அதாவது அந்தக்காலத்தில் சுவர்க்கடிகாரமானது இரண்டு பெண்டுலங்களைக் கொண்டிருக்கும். அவை கடிகாரத்தின் இருபக்கமும் சென்று மீண்டும் வந்து சேரும். அவ்வாறு அவை இருமுனைகளுக்கும் செல்லும் போது சற்று நின்று மீண்டும் திரும்பும். அவ்வாறு நிற்கின்ற நேரத்;தைக் கணக்கிட முடியாது அது ஒரு விநாடிக்கும் குறைவாக இருக்கும். அதே போல் தான் மனிதன் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்றும் ஒரு விநாடிக்குக் குறைவான நேரத்தில் வெளி மூச்சாக மாறி வெளியேறுகிறது என்று அன்றே சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அறிவியலைக் கடந்து, அறிவியலைத் தாண்டி, அறிவியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மீகமாகக் கருத்துக்களைச் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். “உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர் உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே” உடம்பு முதலில் உயிரைக் கொண்டதா? இல்லை உயிர் முதலில் உடம்பைக் கொண்டதா? என்பது இன்றும் அறிவியல் உலகிற்குப் புதிரான ஒன்று. அறிவியல் ரகசியத்தைச் சித்த ரகசியம் கூறுகிறது. உடம்பை மறந்து மெய் உணர்வில் நின்று அந்த ஞானத்தால் தெளிந்தால் தான் அது புரியும் என்கிறது சித்தம். சித்தர்;கள் ஆன்மீகத்தில் ஒளித்து வைத்துள்ள தகவல்கள் நம்மையே வியக்க வைக்கின்றன. உலகளாவிய மக்கள் சித்தர்களை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, இன்றைய அறிவியலுக்கு அடித்தளமிட்டவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். |
||||||||
by Lakshmi G on 11 Oct 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|