LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா...

ஐ படத்தை தொடர்ந்து ஷங்கர் யாரை இயக்கப் போகிறார் என்பது தான் ரசிகர்களின் அனேக எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் ரஜினியுடன் ஆமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் தான் இயக்குவார் என பரவலாக செய்திகள் வெளியாகின.

ரஜினியும் ஷங்கரும் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர். இது அடுத்த படத்துக்கான சந்திப்புதான் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதில் முதலில் ரஜினி நடிப்பார் என்று சொல்லப்பட்டது. பின்னர் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தான் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.  

இப்போது ரஜினியும் ஆமீர்கானும் இணைந்து இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியும், அமீர்கானும் இணையும் பட்சத்தில் படத்தின் பட்ஜெட் 200 கோடியைத் தாண்டினாலும் கவலைப்படத் தேவையில்லை. படத்துக்கு உலக அளவில் பெரும் வசூலும் குவியும் என்பதால், இருவரையும் இணைப்பதில் ஷங்கர் தீவிரம் காட்டுகிறாராம்.

எந்திரன் 2-ம் பாகத்தில் நிறைய கிராபிக்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் உள்ளதால், பணம் ஏராளம் தேவைப்படும். எனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு செலவழித்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் ஷங்கர்.  விரைவில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 03 Feb 2015  0 Comments
Tags: ஷங்கர்   ஷங்கர் அடுத்த படம்   ரஜினிகாந்த்   ஆமிர்கான்   Shankar   Rajinikanth   Aamir Khan  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.