LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

ஆகாயம் – வெற்றியின் வாயில்படி

எத்தனை எத்தனை முயற்சி செய்தாலும் எனக்கு மட்டும் வெற்றி கிட்டுவதில்லையே? நான் செய்வதைத் தானே அவனும் செய்கிறான் ஆனால் அவன் மட்டும் வெற்றி பெறுகிறானே என்று ஆதங்கப்படுவரா நீங்கள்? சரி, ஒரே செயலை ஒருவர் செய்யும் போது கிட்டும் வெற்றி, மற்றொருவருக்கு சாத்தியப்படுவதில்லையே எதனால்? இது ஆகாய சக்தியை நாம் கிரகித்துக் கொள்ளும் விதத்தினால்தான் என்கிறார் சத்குரு. அதை வளர்த்துக் கொள்வதற்கு வழியும் சொல்கிறார். ஆகாயம் உங்கள் வசமாகட்டும்!
சத்குரு:
காரணமே இல்லாமல் சில பேர் வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படுகிறார்கள், இல்லையா? காரணமே இல்லாமல் மற்ற சிலர் அனைத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறார்கள். இதற்கெல்லாம் எந்தவிதமான காரணமும் இல்லை. நம்மை விட பெரியதான அந்த அறிவாற்றலின் ஒத்துழைப்பை, விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வின்றியோ பெற முடிகின்ற உங்களுடைய திறமைதான் காரணம். ஆகாயமே அடிப்படையான சக்தி.
ஒரு மனிதனை மிகப் பெரிய சாத்தியமாக மாற்றுவதற்கு, நீர், நிலம், நெருப்பு, காற்று, இவற்றோடு ஐந்தாவது மற்றும் மற்ற நான்கை விட மிகப் பெரிய பரிமாணமான ஆகாயம் ஆகியவை எப்படி செயல்படுகின்றன என்பது மிக முக்கியம். இன்றைய நவீன விஞ்ஞானம், ஆகாஷிக் புத்திசாலித்தனம் என்றழைக்கப்படும் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது; அதாவது வெற்றிடத்துக்கென்று ஒரு அறிவாற்றல் இருக்கிறது. இந்த அறிவாற்றல் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்கிறதா அல்லது பாதகமாக வேலை செய்கிறதா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை முடிவு செய்யும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவரா அல்லது வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படப் போகிறீர்களா என்பது அந்த அறிவாற்றலைப் பொறுத்தே இருக்கிறது.
ஆகாயம் – அதை ஐந்தாவது பூதம் என்று சொல்வது சரியல்ல, ஏனென்றால் பிற பூதங்களைவிட உயர்ந்தது. மற்ற நான்குமே அதைச் சார்ந்தே செயல்படுகின்றன. இப்போது நாம் ஒரு வட்டவடிவ கிரகத்தில் இருக்கிறோம். பூமி, சூரிய மண்டலம், இந்தப் பால்வெளி மண்டலம், ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்று அனைத்துமே ஆகாயம் என்னும் வெளியில்தான் இருக்கின்றன. நீங்களுமே ஆகாயத்தின் பிடியில்தான் இருக்கிறீர்கள்.
டெண்டுல்கர் கூட சதமடித்த பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை கவனித்திருக்கிறீர்களா? அவர் மட்டுமல்ல, ஆதிகாலத்திலிருந்து மனிதன் ஏதாவது ஒரு சாதனையை செய்து முடித்தவுடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். அவர்களில் சிலர், மேலே இருப்பவனையோ அல்லது வேறு சில கடவுள்களையோ ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கண்டுபிடிக்க முயற்சி செய்யக்கூடும், ஆனால் மற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற உண்மை தெரிந்துள்ளது.
ஏதாவது ஒரு சமயத்தில், நீங்கள் ஒரு உச்சபட்ச அனுபவத்தை எட்டுகிறபோது, உங்கள் விழிப்புணர்வில் இல்லாமலேயே உங்கள் உடல், நன்றியுணர்வில் மேல் நோக்கிப் பார்க்கிறது. ஏனென்றால் மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு அறிவாற்றலுக்கு அதைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பை எப்படிப் பெறுவது என்று உங்களுக்குத் தெரிந்தால், பிறகு உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத ஒரு அறிவாற்றல் உங்கள் வசமாகும், ஏனென்றால் உங்கள் புரிதலுக்கும், எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு அறிவாற்றல் இங்கு, இப்போது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இல்லையா? அந்த அறிவாற்றல்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒன்றாக பிணைத்து, பிடித்து வைத்திருக்கிறது; அதுதான் படைப்பின் கருவறையும்கூட. அந்த அறிவாற்றலின் கருவறையில்தான் அத்தனை படைப்புகளும் நிகழ்கின்றன. அது உங்களுக்கு மறுக்கப்படவில்லை. அதைப் பெறுவதற்கான அனுமதி உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அந்தத் திசையில் நீங்கள் பார்க்கவில்லை, அவ்வளவுதான்.
நீங்கள் யார் என்கிற அந்தச் சிறிய தன்மைக்குள் நீங்கள் மூழ்கிக் கிடக்கிறீர்கள். உங்கள் உடல், எண்ணம், உணர்ச்சிகள், சுரப்பிகள் எல்லாமே உங்களை ஆக்கிரமித்துள்ளன. அதனால் உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பார்த்து, அதன்மேல் கவனம் செலுத்துவதைப் பற்றிய எண்ணம் உங்களுக்குத் தோன்றவே இல்லை.
நிறைய அற்புதமான, அதிசயமான விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் மிக ஆச்சரியகரமான முறையில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும், உங்கள் தலையில் குடைந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய புழு போன்ற எண்ணம், மற்ற எதையும் கவனிக்க விடாமல் உங்களை ஆட்கொண்டிருக்கிறது. இதுதான் மாயை.
மாயை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்று என்று அர்த்தம் கிடையாது. ஏதாவது அற்புதமான, முக்கியமான விஷயம் நடக்கிறபோது, இதுபோன்ற சிறு விஷயங்கள் உங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்தச் சின்னஞ்சிறு விஷயங்கள் மற்ற அனைத்தையும் விட முக்கியமானவை என்று உங்களை நினைக்க வைக்கின்றன. இதுதான் மாயை.
எனவே ஆகாயத்தின் ஒத்துழைப்பைப் பெற, ஒரு எளிமையான செயல்பாட்டை நீங்கள் செய்யலாம். சூரிய உதயத்திற்க்குப் பிறகு, சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடப்பதற்கு முன்னர், வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்து, இன்று இந்த இடத்தில் உங்களைப் பிடித்து வைத்திருப்பதற்காக அதற்கு நன்றி சொல்லுங்கள்.
சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடந்தபிறகு, அன்றைய நாளின் வேறெதாவது ஒரு சமயத்தில், ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். அங்கிருக்கும் ஏதோ ஒரு கடவுளைப் பார்த்து நீங்கள் தலை வணங்கவில்லை.
உங்களை இன்று, இந்த இடத்தில் பிடித்து வைத்திருக்கும் அந்த வெற்றிடத்தை வணங்குகிறீர்கள். இதைச் செய்து வந்தால், உங்கள் வாழ்க்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி விழிப்புணர்வுடன் செய்து வந்தால், உங்களுக்கு அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், வாழ்க்கை பல வழிகளிலும் ஒரு மந்திரஜாலத்தைப் போல நிகழும்.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.