LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழர்கள் வெளிநாட்டு பொறுப்புகள் -International positions

ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!!

நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் மாநகர துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் பிறந்த இவர், மூன்று வயதில் நார்வேயில் குடியேறினார். தற்போது அவருக்கு வயது 27 ஆகும். 
கான்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து ஒஸ்லோ நகரை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நோர்வேயின் தொழிற்கட்சி தலைமையிலான, பசுமை, சோசலிச கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியுள்ளது. சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான, மரியன் போகன், ஒஸ்லோ மாநகர முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அவருக்குக் கீழ், ஹம்சாயினி குணரத்தினம், பிரதி நகரமுதல்வராகப் பணியாற்றவுள்ளார். ஹம்சாயினி குணரத்தினம், 2011ஆம் ஆண்டு, நோர்வேயின் உடோயா தீவில் நடந்த தொழிற்கட்சியின் கோடைகால முகாமின் மீது துப்பாக்கி தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்து, நீந்திக் கரையேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 14 Oct 2016  0 Comments
Tags: Khamshajiny Gunaratnam   Hamshayini   Oslo Deputy Mayor   Srilankan Tamil Women   Tamil Women   ஒஸ்லோ   ஹம்சாயினி குணரத்தினம்  
 தொடர்புடையவை-Related Articles
ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!! ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!!
இசைக் கலைக்குப் பெண்களின் பங்களிப்பு -  முனைவர் இ. அங்கயற் கண்ணி இசைக் கலைக்குப் பெண்களின் பங்களிப்பு - முனைவர் இ. அங்கயற் கண்ணி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.