தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விருமன்.
பி ஜி முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும் பாரதிராஜா பிரகாஷ்ராஜ் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிராமத்து கதை களத்தை மையமாகக் கொண்டு குடும்ப உறவுகளை பேசும் படமாக வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இது விருமன் படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
|