நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும், மார்கோனி பரிசு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், விஞ்ஞானியுமான தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.
ரோடியோவை கண்டுபிடித்த மார்கோனியின் மகள் ஜியோயா மார்கோனி பிராகா தனது தந்தையின் நினைவாக மார்கோனி சொசைட்டியை துவங்கினார். இந்த சொசைட்டி தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் புதியவைகளை கண்டுபிடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் மார்கோனி பரிசை அளித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பரிசு கோவையில் பிறந்து அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.
ஜோசப் பால்காராஜின் கண்டுபிடிப்பான எம்ஐஎம்ஓ(MIMO) ஆன்டனா (மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட்) பிராட்பேண்ட் சேவைகளில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வை-ஃபை ரூட்டர் மற்றும் 4ஜி போன்களில் பால்ராஜின் எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எம்ஐஎம்ஓவை கண்டுபிடித்தற்காக தான் பால்ராஜுக்கு மார்கோனி பரிசு கிடைத்துள்ளது.
|