இணையவழியில் குடும்ப அட்டை முகவரி மாற்றத்திற்கான எளிய வழிமுறைகள் இதோ!
குடும்ப அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. நாம் அரசின் உதவிகளைப் பெற ஆதாரமும் அதுவே. தற்போது இணையத்தில் குடும்ப அட்டையின் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது.
✓ www.pdsportal.nic.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லுங்கள். ✓தோன்றும் முகப்பு திரையில் மத்திய அரசு என்பதை தேர்ந்தெடுங்கள். ✓அதில் உள்ள குடும்ப அட்டை முகவரி மாற்றம் படிவத்தினை தேர்ந்தெடுங்கள். பயனர் குறிப்பு (User ID)மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட்டு உள் நுழையுங்கள். ✓சரியாக விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். ✓குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்யப்பட்டு விடும். மாற்றம் பெற்ற முகவரியோடு குடும்ப அட்டையினை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
|