உலகத் திருக்குறள்‌இணையக் கல்விக்கழகம் நடத்தும் உலகத் தமிழ் நாள் விழா
LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத் திருக்குறள்‌இணையக் கல்விக்கழகம் நடத்தும் உலகத் தமிழ் நாள் விழா

உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் நடத்தும் உலகத் தமிழ் விழா ஏப்ரல் 29 ,2023 , இந்திய நேரம் காலை 6:30 மணி (IST) நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 19 நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் தமிழியல் இருக்கைக்குழுவின் அமைப்பாளர் மருத்துவர். விஜய் ஜானகிராமன் அவர்கள் தலைமையேற்கிறார். துணை அமைப்பாளரான மரு.சு.திருஞானசம்பந்தம் துவக்கி வைக்கிறார். பலவேறு தமிழறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் ஆய்வுரை வழங்க உள்ளனர். இதில், தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற முதல் அயலகப் படைப்பாளியான பாவலர் முரசு நெடுமாறன், பெரியாரியல் பன்னாட்டு ஆய்வு மைய நிறுவனரும் அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுப் பணியாளருமான மரு.சோம.இளங்கோவன், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவரான பாலா.சாமிநாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், கனடாவின் வாட்டர்லூ பல்கலைகழகத்தின் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சிறப்புநிலை தமிழாய்வு மையத் தலைவர் பேராசிரியர் இரா.அறவேந்தன் மற்றும் மணவை முஸ்தபா தமிழ்க் கல்வி-கலைச்சொல்லாக்க அறக்கட்டளையின் நிறுவனரான மரு.செம்மல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் ஆய்வுரையாற்றுகின்றனர்.

இந்த உலகத் தமிழ் விழாவை, உலகத் திருக்குறள் இணையக்கல்விக் கழகம் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து நாளை இந்தியநேரப்படி காலை 6:30 முதல் 9:30 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்வோர் தமிழை உலகளாவிய வளர்ச்சிக்கும் விரிவுக்கும் முன்னெடுத்துச் செல்ல ஆக்கவுரைகளை மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் வழங்க உள்ளனர். இதற்காக, எழுத்துரையைப் பதிவுசெய்து புலனத்தின் வழியாக அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியின் குவியம் எண்: 4775896897 மற்றும் கடவுச் சொல்: 123456 என அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் செய்துள்ளது.

by Swathi   on 29 Apr 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நடிகர் சரத் பாபு காலமானார்...அஞ்சலி.. நடிகர் சரத் பாபு காலமானார்...அஞ்சலி..
எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண் எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண்
விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது
திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன்
9ஆம் வகுப்பில் இந்த ஆண்டு தமிழ்மொழி  கட்டாயம் 9ஆம் வகுப்பில் இந்த ஆண்டு தமிழ்மொழி கட்டாயம்
மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது? மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது?
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.