|
|||||
”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” |
|||||
![]() ”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்று ஒரு பழமொழி உண்டு ! உண்மையில் இங்கு அப்படித்தான் இருக்கிறது உழவர்களின் நிலை ! காவிரிப் பாசன பகுதியான கடலூர் மாவட்டம் சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் வட்ட சாகுபடி பகுதியில் ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு ஆகும் செலவும் - அதன் வருமானமும் பட்டியலிடப் பட்டிருக்கிறது. இதில் நிலத்தடி நீர் பாசனக் கருவிகள், பசுந்தாள் குப்பை எரு, குடும்ப உறுப்பினர்கள் செலவிடும் உழைப்பின் மதிப்பு , வைக்கோல் ஏற்று கூலி இறக்கு கூலி, தொழிற்சாலைகளுக்கு உள்ளது போல் நில வாடகை, வளத் தேய்மானம், தனியார் ஆலை கொள்முதல் விலை குறைப்பு , ஆள் பற்றாக்குறையினால் ஏற்படும் கூலி உயர்வு, விவசாயக் கடனுக்கான ஆண்டு வட்டி, விளைபொருள் மகசூள் குறைவு என்பன போன்றவை செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை ! இதையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் இழப்பு ஏறக்குறைய பாதிக்குப் பாதி ! ஐம்பது பைசா மிட்டாய் கூட இலாப விலையுடன் தான் சந்தைக்கு வரும் இந்நிலையில் வேளாண்மைக்கு ஏன் இந்த ஒரு நிலை! வறட்சி, மழை, வெள்ளம் என இயற்கை சூழலோடும், ஆனால், ஆண்டு முழுவதும் உழைத்து கொடுக்கும் உழவனுக்கு குவிண்டால் நெல்லுக்கு உரிய கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய கணக்குப் பார்க்கும் மத்திய மாநில அரசுகளோ மக்கள் பணத்தை சூறையாடும் உலக மய முதலாளிகள் டாடாவுக்கும் அம்பானிக்கும் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது. வேளாண்மையை இலாபமற்ற தொழிலாக்கி உழவர்களே நிலத்தை விட்டு தானே வெளியேறுங்கள் என வெளியேற சொல்கிறதோ அரசு ? சிந்தியுங்கள் ! தமிழக அரசே ! ============================ |
|||||
by Swathi on 19 Mar 2014 4 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|