|
|||||
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு |
|||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: >நேரடிக் கல்லூரிப் படிப்பு இளநிலை , அதற்குமேல்.
>திருக்குறளை முழுமையாகப் படித்து உள்வாங்கி இருக்கவேண்டும்.
>திருக்குறள் முற்றோதல் செய்தவர்களுக்கு, முற்றோதல் செய்யும் மாணவர்களை உருவாக்கியவர்களுக்கு முன்னுரிமை.
>பயிற்சியளிக்கும் ஆர்வமும், திருக்குறள் கவனகம் கற்றுக்கொள்ள ஆர்வமும் வேண்டும்.
>வேலைவாய்ப்பாக மட்டுமல்லாமல் வாழ்வியலாக பின்பற்றி முன்னெடுக்க ஆர்வம் வேண்டும்.
>கணினியை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்..
மாத அடிப்படை ஊக்கத்தொகை: தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகள், தனி வகுப்புகள், மாவட்டத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் மக்களுக்கு அனைவருக்கும் பயிற்சியாளர் நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெற்றுக்கொண்டும் வகுப்பு நடத்தலாம்.
சுயவிவரக் குறிப்புடன் தொடர்புகொள்ள: kural.mutrothal@gmail.com ஒருங்கிணைப்பு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை இணைந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் நடத்தும் திருக்குறள் முற்றோதல் இலவசப் பயிற்சி. முகவரி மாவட்டத் திருக்குறள் புரவலர் ஜெனிஃபர் இனிப்புகள் மற்றும் அடுமனை |
|||||
by Kumar on 30 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|