|
|||||
நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்? |
|||||
![]() தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. நூறு அடிக்குள் தண்ணீர் கிடைத்த பல இடங்களில் இன்று பலநூறு அடிகள் ஆழம் சென்றாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற நிலையும், அனைவரும் குழாயில் தண்ணீர் எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எதிர்கால உலகப் போர் தண்ணீருக்காக வரும் என்ற கூற்றை எல்லாம் தாண்டி அதற்குள் பல உயிரினங்கள் அழிந்து மனிதனுக்கு அடிப்படை வாழ்வியலுக்கே தண்ணீர் சிக்கலாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பல அறிஞர்களும் பல எச்சரிக்கைகளை செய்தாலும், அரசுகள் இதை தலையாய பிரச்சினையாக எடுத்து திட்டம் வகுக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த நிலையில் ஒருபக்கம் அரசுகளுக்கு குறுகியகால நீண்டகாலத் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கைகளை வைக்கும் அதேவேளையில், அவற்றை ஆங்காங்கே பள்ளிகளும், தன்னார்வ அமைப்புகளும், இளைங்கர்களும் , சமூக சிந்தனையாளர்களும் கையில் எடுத்து மரக்கன்றுகளை வழங்குவது, மரங்களை நட்டு பாதுகாப்பது என்று தமிழகம் முழுதும் விழிப்புணர்வு கொண்டு செயல்படுவது மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் புத்தக கடை மு. முருகன் ( 8489777140 ), கதிர்வேல் மரபு அங்காடி (7010913368) இருவர் முயற்சியில் தன்னார்வலர்கள் இணைந்து ம.செந்தமிழனின் "நீர்நிறை - சிவகங்கை" என்ற பெயரில் மரங்களை நட்டுவருகிரார்கள். நிலத்தடி நீரை பாதுகாக்க, மழையைப் பெரும் பசுமை சோலைகளை தமிழகத்தில் உருவாக்க எந்தவகை மரங்களை உருவாக்கவேண்டும் என்று ஆராய்ந்து, இழந்த மண் வளத்தையும், இழந்த மழை வளத்தையும் 5 வருட காலங்களில் மீட்டெடுத்து மண்ணை வளமாக்க கூடிய பலா, உதியன், இலுப்பை மரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். ஏன் இந்தவகை மரங்களை தெரிவு செய்தார்கள் , பனை மரத்தை ஏன் தெரிவு செய்யவில்லை என்று வினவியபோது: பனை மரம் வளர்ந்து வருவதற்கு நீண்ட காலங்கள் ஆகும். ஆனால் இந்த மூன்று மரங்களும் 5 வருடத்திலயே வளர்ந்து பெரிய மரமாகி விடும். இன்றைய சூழலியல் மாற்றத்துக்கு தீர்வு குறுகிய காலத்தில் கிடைத்தால் மட்டுமே நன்மையாக இருக்கும். இரண்டாவது பல்லுயிர் பெருக்கத்தின் புழுக்கம் எந்த பகுதிகளில் அதிகம் இருக்கிறதோ அந்த பகுதிகளில் தான் மழைப்பொழிவும் அதிகமாகயிருக்கும் அந்த வகையில் இந்த மூன்று மரங்களும் பயன்படும். பனை மரம் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும், மழைக்கான மேகக்கூட்டத்தை உருவாக்குவதில் இதனின் பங்கு குறைவு தான். ஆனால் இந்த மூன்று மரங்களும் மேகக்கூட்டத்தை உருவாக்குவதில் கில்லாடிகள், இலுப்பை நிலத்தடி மட்டத்தை பாதுகாப்பதில் பனைக்கு சமமானவன். எனவே பனை மரத்தை இரண்டாவது கட்டமாக திட்டமிடுகிறோம், பனை வளர்ந்து வரும் பொழுது அதற்கான வேலையை இந்த மூன்று மரங்களும் உருவாக்கி வைத்திருக்கும் பலா மரத்தின் பயன்கள்: 1) மழையை வருவிக்க கூடிய தன்மையை கொண்டது 2) உடலுக்கு ஆரோக்கியமான கனியை தரக்கூடியது 3) சுவாசிக்க உயிர் காற்றை தரவல்லது
உதியன் மரத்தின் பயன்கள்: 1) பூமியை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது 2) கோடை காலத்தில் தன் இலைகள் முழுவதையும் மண்ணுக்கு அளித்து மண் வளத்தையும், மண்புழு, மரவட்டை போன்ற பல்லுயிர்களின் பெருக்கத்தையும் வளர்க்க வல்லது. 3) சுவாசிக்க உயிர் காற்றை தரவல்லது
இலுப்பை மரத்தின் பயன்கள்: 1) மருத்துவ குணம் கொண்டது 2) நீர்மட்டத்தை உயர்த்தவல்லது 3) சுவாசிக்க உயிர் காற்றை தரவல்லது
மேலும் மழைக்கான மேகத்தை உருவாக்குவது யார்? பூமியிலிருந்து வெப்ப காற்று அதிகமாக மேலே செல்லும் போது உருவாகும் மேகம் தான் வெண்மேகம். பூமியிலிருந்து குளிரான காற்று அதிகமாக மேலே செல்லும் போது உருவாகும் மேகம் தான் சாம்பல் நிற மேகம். (மார்கழி மாதத்தில் அதிகமாக உருவாகும்) . பூமியிலிருந்து வெப்பமும், குளிரும் சமமாக கலந்து மேலே செல்வதின் மூலமாக உருவாவது தான் கருமை மேகம் இந்த மேகத்திற்கு தான் மழைப்பொழிவை கொண்டு வரும் சக்தி உண்டு. இந்த கருமை நிற மேகம் உருவாக வேண்டும் என்றால் மரமும், அந்த மரத்தினால் பல்லுயிர் பெருக்கமும் இருந்தால் தான் புழுக்கம் ஏற்பட்டு பூமியிலிருந்து வெப்பமும், குளிரும் கிளம்பி மேகத்தை புணர்ந்து மழையை உருவாக்கும். இந்த பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்குவதில் பலா, உதியன், இலுப்பை மரங்களுக்கு அதிகமான பங்குண்டு. அதற்காக மற்ற நாட்டுவகை மரங்கள் குறைந்தவைகள் அல்ல, இன்றைய சூழலில் பலா, உதியன், இலுப்பை மரங்களை அதிகளவில் வளர்த்தால் குறுகிய காலத்தில் இழந்த மழைவளமும், மண் வளமும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லிகொண்டே வரிசையில் வந்துநின்ற கிராம மக்களுக்கு மரக்கன்றுகளை கொடுக்கின்றனர்.
நீங்கள் சிவகங்கை மாவட்டமா? இணைந்துகொள்ளுங்கள், மற்ற மாவட்டமா விவரம் பெற்று செயல்படுத்துங்கள்..
தொடர்புகொள்ள: புத்தக கடை மு. முருகன் - 8489777140 கதிர்வேல் மரபு அங்காடி - 7010913368
- வலைத்தமிழுக்காக இலக்கியன் |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
by Swathi on 22 Oct 2018 3 Comments | |||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|