LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!

கடந்த சனிக்கிழமை ஆகஸ்டு 05, 2017-ல் வட அமெரிக்காவின்  கலிபோர்னியாவில் முதன் முதலாக வள்ளலாருக்கு ஒரு தனித்துவமான விழா நடைபெற்றது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆன்மநேய அருட்சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கியுப்பர்டினோ நகர மேயர் திருமதி.சபிதா வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வளைகுடா தமிழ்மன்றத்தின் தலைவர் திரு.குணா பதக்கம், திரு.சந்திரசேகர் , யோகி ஸ்டீவன் , வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.துரை சந்தானம், திரு.தில்லை குமரன், திருமதி.கீதாநிதி ஜெயபாண்டியன் போன்றோர் பல்வேறு தலைப்புகளில் வள்ளலாரின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இன்னிசை ஏந்தல் திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் பயிற்சியளித்த குழந்தைகள் வள்ளலார் பாடல்களைப் பாடி அசத்தினர். திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் வள்ளலார் பாடல்களைப் பாடி அருட்பா இன்னிசையோடு நடந்த சுத்த சன்மார்க்கப் பெருவிழாவாக நிகழ்ச்சியை மாற்றினார் .

இதை வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா என்ற அமைப்பு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு வள்ளலார் சன்மார்க்க வழியை பின்பற்றுபவர்களை அமெரிக்காவின் மாநில அளவில் ஒருங்கிணைத்து வள்ளலார் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச்செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

by Swathi   on 09 Aug 2017  1 Comments
Tags: வள்ளலார் விழா   Vallalar Vizha   Vallalar Vizha 2017   Vallalar Universal Mission   USA Tamil Events   USA Vallalar Vizha     
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது! வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில்  தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்
கருத்துகள்
18-Aug-2017 15:23:30 கேசவன் said : Report Abuse
அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.